ஆரணச் சாலையும் சித்திரச் சவுக்கையும் அன்ன சத்திர வீதியழகும் அஸ்த மண்டபமுடன் கர்ப்பக்கிரகமும் ஆதிசோபன மண்டபமுடன் பூரணப் பெருமையும் கம்பமணி மண்டபம் பூஜை மாளிகையுடன் பொன்னழகு திருமதில் ஆலயவாசலும் புதுராஜ கோபுரவடிவும் வாரணப்பந்தியும் நந்திகளும் மேடையும் மயிலாடும் வீதியழகும் வளரும் முத்தையனுடன் மகிமையும் கிருபையும் காதணி அழகிய மீனிணைப்பாக அகஸ்தீஸ்வரஸ்வாமி வாழ்த்துதற்கு இனியதாகுமே சிருங்கபுரம் எனும் கோட்டூர்ப் புரியின் கருணை நயினார் வாசல் வளர்கின்ற பிரதானி முத்துக்கருப்பண்ண சுவாமி துரையே.
தீவட்டி உடனிருக்க பகல்வத்தி நிறையிட்ட சிங்காரம் ஒருபாரிசம் தீபதூபப் புகையுடன் சாம்பிராணி வாசங்கள் தெய்வங்கள் ஒருபாரிசம் வாய்விட்டதட்டியே திருட்டுப்பிசாசகளை வகைகேட்பதொரு பாரிசம் வகை கேட்டிருக்கியே சவுக்கடியினால் அடித்து அதட்டுவது ஒரு பாரிசம் நீ விட்டுவிடு சுவாமி நான் போறேன் போறேன் என நின்றாடுவது ஒரு பாரிசம் நெற்றிமயிர் சுற்றியே நிலையாணி யிட்டுதிரு நீறணிவது ஒரு பாரிசம் வரும்போது முத்துக்கருப்பே கருப்பையா வாவென்று வரவழைக்கவே தான் பெயரிட்ட புதுமையே பெரிய குலதெய்வமே பெரிய மந்திக்கருப்பண்ண சுவாமி துரையே.
காசிக்கும் அப்பாலே அறுபதாம் காத வடிகாணாது கண்டமயிலே கர்நாடுதேசமும் தெஞ்சி மேல் மட்டுக்கும் கத்தியே வெட்டி வருவாய் தேசக்குதிரை கொண்டு ஒட்டையானை கொண்டுதெஞ்சிமேல் வந்திறங்கி பேரானகோட்டூர் நகர்தனில் வளர்கின்ற பிரதானி முத்துக்கருப்பண்ண சுவாமிதுரையே