கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மங்கலத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா!பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினமேசங்கரனார் தருமதலாய் சங்கடத்தைச் சம்கரிக்கும்எங்கள் குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலிஒப்பில்லா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்துஎப்பொழுதும் வணங்கிடவே எமையாள வேண்டுமெனஅப்பனவன் மடியமரும் அருட்கனியே கணபதியே!பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்கும் உக்கியிட்டுஎள்ளளவும் சலியாத எம்மனத்தை உமக்காக்கித்தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில் போற்றுகின்றோம்உள்ளியதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியேஇன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீஎழுந்துஎன்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்கபொன்வயிற்றுக் கணபதியே போற்றியெனப் போற்றுகின்றோம்.-துர்க்கை சித்தர்