கருப்பு நீ! ஆனாலும் கண்களில் சிவப்பு நீ! கடவுளுள் நெருப்பு நீயே! விருப்பு நீ இதயத்தின் இருப்பு நீ! மலைப்பு நீ வியப்பு நீ! தீமையைப் பொசுக்கு நீ! உசுப்பு நீ பூமியில் தூங்குவோரை! கருப்பரே! எங்களின் கண்கண்ட தெய்வமே! கருணையைக் காட்டவா நீ!
குடையும் நீ! தருவதில் கொடையும் நீ! மழையும் நீ! குறுக்கு வழிகளுக்கே தடையும் நீ! படையும் நீ! அருள்வெள்ள மடையும் நீ! தாழ்வுற்ற பேர்களுக்கு உடையும் நீ! உயிரும் நீர்! உட்பொருள் ஒளியும் நீயே! உன்னடி தொழுதவர்க்கு விடையும் நீ! விதையும் நீ! விளையும் நீ! முளையும் நீ வேண்டிய தெய்வம் நீயே!