பதிவு செய்த நாள்
23
ஜூலை
2015
05:07
1. ஏகதா ததி விமாத காரிணீம் மாதரம்
ஸமுபஸேதிவாந் பவாந்
ஸ்தந்ய லோலுப தயா நிவாரயந் அங்கம்
ஏத்ய பபிவாந் பயோதரௌ
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! ஒரு நாள் உனது தாய் யசோதை தயிர் கடைந்து கொண்டிருந்தாள். அப்போது உனக்குப் பசித்த காரணத்தால் பால் குடிக்க வேண்டும் என்று எண்ணினாய். அவளிடம் சென்று தயிர் கடைவதை நிறுத்தி, அவள் மடியில் அமர்ந்து அவள் ஸ்தனங்களில் பால் அருந்தினாய் அல்லவா?
2. அர்த்த பீத குச குட்மலே த்வயி ஸ்நிக்த
ஹாஸ மதுர ஆநந அம்புஜே
துக்தம் ஈச தஹநே பரிஸ்ருதம் தர்த்தும்
ஆசு ஜநநீ ஜகாம தே
பொருள்: குருவாயூரப்பா! ஈசனே! தாமரை மொட்டுகள் போன்று அழகான அவள் ஸ்தனங்களில் பாலைப் பருகினாய். அந்த மகிழ்வால் உனது முகம் தாமரை போன்று மலர்ந்து காணப்பட்டது. அந்த நேரம் அடுப்பில் வைத்திருந்த பால் பொங்கி வழியத் தொடங்கவே, உனது தாய் விரைவாக (உனக்கும் பால் கொடுப்பதை நிறுத்திவிட்டு) உன்னைக் கீழே உட்கார வைத்துவிட்டு அடுப்படிக்குச் சென்றாள்.
3. ஸாமிபீத ரஸ பங்க ஸங்கத
க்ரோத பார பரிபூத சேதஸா
மந்த தண்டம் உபக்ருஹ்ய பாடிதம் ஹந்த
தேவ ததி பாஜநம் த்வயா
பொருள்: குருவாயூரப்பா! நீ பாலை முழுவதுமாகப் பருக இருந்தபோது உனக்கு முழுவதுமாக பால் கிடைக்காமல் தடைப்பட்டவுடன் குழந்தைகளுக்கே உரித்தான கோபம் கொண்டாய். உடனே அங்கு இருந்த மத்தை எடுத்து அங்கு இருந்த தயிர் பானையை உடைத்தாய் அல்லவா?
4. உச்சலத் த்வநிதம் உச்சகை: ததா
ஸந்நிசம்ய ஜநநீ ஸமாத்ருதா
த்வத் யச: விஸரவத் ததர்ச ஸா ஸத்ய:
ஏவததி விஸ்த்ருதம் க்ஷிதௌ
பொருள்: குருவாயூரப்பா! சத்தம் கேட்டவுடன் (உனக்கு ஆபத்து வந்து விட்டதோ என்று நினைத்து) மிகவும் விரைவாக யசோதை ஓடி வந்தாள். அங்கு வந்தவுடன், உனது புகழானது பரவி நிற்பது போல் தயிர் எங்கும் உள்ளதைக் கண்டாள்.
5. வேத மார்க பரிமார்கிதம் ருஷா த்வாம்
அவீக்ஷ்ய பரிமார்கயந்தீ அஸௌ
ஸந்ததர்ச ஸுக்ருதிந் உலூகலே
தீயமாந நவநீதம் ஓதவே
பொருள்: குருவாயூரப்பா! நீ வேதங்களால் தேடப்படுவன் அல்லவா? இப்படிப்பட்ட உன்னை பெரும் புண்ணியம் செய்திருந்த யசோதை தேடினாள். உன்னைக் காணாமல் கோபம் கொண்டாள். அப்போது ஓர் உரலின் மீது அமர்ந்து நீ பூனைக்கு வெண்ணெய் கொடுத்து கொண்டிருப்பதைக் கண்டாள்.
6. த்வாம் ப்ரக்ருஹ்ய பத பீதி பாவநா
பாஸுர ஆநந ஸரோஜம் ஆசுஸா
ரோஷ ரோஷித முகீ ஸகீ புரோ பந்தநாய
ரசநாம் உபாததே
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அவளைக் கண்டவுடன் நீ பயந்தவனாக முகத்தை வைத்துக் கொண்டாய். அப்போது தாமரை போன்ற உனது முகம் மேலும் அழகானது. உன்னை யசோதை விரைவாக வந்து பிடித்தாள். கோபத்தால் அவள் முகம் சிவந்தது. அவளுடைய தோழிகளுக்கு முன்னால், உன்னை உரலில் கட்டி வைக்க எண்ணி கயிற்றை எடுத்தாளாமே! என்ன விபரீதம்!
7. பந்தும் இச்சதி யம் ஏவ ஸஜ்ஜந: தம்
பவந்தம் அயி பந்தும் இச்சதி
ஸா நியுஜ்ய ரசநா குணாந் பஹுந் த்வி
அங்குல ஊநம் அகிலம் கில ஐக்ஷத
பொருள்: குருவாயூரப்பா! உன்னை உனது அடியார்கள் தங்கள் உறவினனாகக் கொள்ள நினைக்கின்றனர். அப்படிப்பட்ட உன்னைக் கட்டிப்போட எண்ணிய யசோதை கயிறுகளை எடுத்தாள். எத்தனைக் கயிறுகளை ஒன்றாகச் சேர்த்தாலும் (உன்னைக் கட்ட முடியாதபடி) அவை இரண்டும் அங்குலம் குறைவாகவே இருந்தது.
8. விஸ்மித உத்ஸமித ஸகீ ஜந ஈக்ஷிதாம்
ஸ்விந்ந ஸந்ந வபுஷம் நிரீக்ஷ்யதாம்
நித்ய முக்த வபு: அபி அஹோ ஹரே பந்தம்
ஏவ க்ருபயா அந்வமந்யதா:
பொருள்: ஹரியே! குருவாயூரப்பா! யசோதையின் முயற்சிகளைக் கண்டு தோழிகள் சிரித்தனர். இதனால் மேலும் வியர்த்து சோர்ந்து போனாள். என்றும் யாராலும் கட்டுப்படுத்த முடியாதவன் நீ! ஆயினும் உனது தாயின் நிலை கண்டு கருணை கொண்ட நீ அவள் கட்டுவதற்கு இணங்கினாய்! என்ன வியப்பு!
9. ஸ்தீயதாம் சிரம் உலூகலே கல இதி
ஆகதா பவநம் ஏவ ஸா யதா
ப்ராக் உலூகல பில அந்தரே ததா ஸர்பி:
அர்பிதம் அதந் அவஸ்திதா:
பொருள்: குருவாயூரப்பனே! இப்படியாக உன்னை உரலில் கட்டிய யசோதை, சேட்டைப் பையனே! இப்படியே உரலுடன் நீ இரு என்று கூறிவிட்டுச் சென்றாள். ஆனால் நீயோ அந்த உரலின் குழியில் முன்பே வைக்கப்பட்ட நெய்யை எடுத்து உண்டாய் அல்லவா?
10. யதி அபாச ஸுகம: விபோ பவாந்
ஸம்யத: கிமு ஸபாசயா அநயா
ஏவம் ஆதி திவிஜை: அபிஷ்டுத:
வாத நாத பரிபாஹிமாம் கதாத்
பொருள்: குருவாயூரப்பா! எங்கும் உள்ளவனே! பாசம் என்பதை அறுத்தவர்களால் மட்டுமே உன்னைக் கட்டுப்படுத்த முடியும். இப்படி இருக்க பாசம் நிறைந்த யசோதைக்கு எவ்வாறு கட்டுப்பட்டாய்? இப்படியாக தேவர்கள் உன்னைப் போற்றினர். அப்படிப்பட்ட நீ என்னைக் காக்க வேண்டும்.