Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » மரங்கள் சரிந்தன
மரங்கள் சரிந்தன!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2015
17:17

1. முதா ஸுர ஓகை: த்வம் உதார ஸம்மதை:
உதீர்ய தாமோதர இதி அபிஷ்ருத:
ம்ருது உதர: ஸ்வரைம் உலூகலே லகந்
அதூரத: த்வௌ ககுபௌ உதைக்ஷதா:

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! உன்னைக் கண்ட தேவர்கள் மிகுந்த ஆனந்தத்தால் உன்னை தாமோதரன் என்று அழைத்தனர். (தாமோதரன் = வயிற்றில் கட்டப்பட்டவன்). மிகவும் மென்மையான வயிற்றை உடைய நீ அந்த உரலின் மீது அமர்ந்து கொண்டு அங்கு இருந்த இரண்டு மருத மரங்களைப் பார்த்தாய் அல்லவா?

2. குபேர ஸுநு: நளகூபுர அபீத: பர:
மணிக்ரீவ: இதி ப்ரதாம் கத:
மஹேச ஸேவா அதிகத ச்ரியா உந்மதௌ
சிரம் கில த்வத் விமுக அவகேலதாம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! குபேரனின் மகன்களான நளகூபரன் என்பவனும் மணிக்ரீவன் என்பவனும் சிவனை ஆராதித்து மிகுந்த செல்வங்கள் அடைந்தனர். இதனால் கர்வம் கொண்டனர். உன்னிடம் எந்த விதமான பக்தியும் செலுத்தாமல் அவர்கள் பொழுதைக் கழித்தனர். அல்லவா?

3. ஸுர ஆபகாயம் கில தௌ மத உத்கடௌ
ஸுராப காயத் பஹு யௌவத ஆவ்ருதௌ
விவாஸஸௌ கேளி பரௌ ஸ: நாரத:
பவத் பத ஏக ப்ரவண: நிரைக்ஷத

பொருள்: குருவாயூரப்பா! அவர்கள் இருவரும் மயக்கவெறி அடைந்தவர்களாகவும், மதுவைக் குடித்து ஆடுபவர்களாகவும், பல பெண்கள் சூழ்ந்து நிற்பவர்களாகவும் இருந்தனர். ஒரு நாள் அவர்கள் இடுப்பில் துணியே இல்லாமல் கங்கையில் குளித்துக் கொண்டிருந்தனர். இதனை, உன்னையே எப்போதும் த்யானித்து வரும் நாரதர் கண்டார்.

4. பியா ப்ரிய ஆலோகம் உபாத்த வாஸஸம்
புர: நிரீக்ஷ்ய அபி மத அந்த சேதஸௌ
இமௌ பவத் பக்தி உபசாந்தி ஸித்தயே
முநி: ஜகௌ சாந்திம் ருதே குத: ஸுகம்

பொருள்: குருவாயூரப்பா! நாரதரைக் கண்ட அவர்கள் இருவரின் மனைவிகளும் பயந்து, தங்கள் ஆடைகளை உடுத்திக் கொண்டனர். இதனைக் கண்டும் அவர்கள் இருவரும் எந்த மாற்றமும் இன்றி இருந்தனர். இதனைக் கண்ட நாரதர், அவர்களுக்கு உன்னிடம் பக்தியும் சாந்தியும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அவர்களைச் சபித்தார். மன அமைதி இன்றி எவ்வாறு இன்பம் கிடைக்கும்?

5. யுவாம் அவாப்தௌ ககுப ஆத்மதாம் சிரம்
ஹரிம் நிரீக்ஷ்ய அத பதம் ஸ்வம் ஆப்நுதம்
இதி ஈரிதௌ தௌ பவத் ஈக்ஷண ஸ்ப்ருஹாம்
கதௌ வ்ரஜ அந்தே ககுபௌ பபூவது:

பொருள்: குருவாயூரப்பா! நாரதர் அவர்களை நோக்கி, நீங்கள் இருவரும் நெடுங்காலம் மரங்களாகவே நின்று இருப்பீர்களாக. அதன் பின்னர் ஸ்ரீஹரி தரிசனம் கிடைத்த பின்னர் உங்கள் இடத்தை அடைவீர்கள் என்று சபித்தார். உடனே அவர்கள் இருவரும் உன்னைத் தரிசிக்கும் ஆர்வம் கொண்டு கோகுலத்திற்கு வந்து மரங்களாக நின்றனர்.

6. அதந்தரம் இந்த்ர த்ருயுகம் ததா விதம்
ஸமேயுஷா மந்த்ர காமிநா த்வயா
திராயுத உலூகலே ரோத நிர்துதௌ
சிராய ஜீர்ணௌ பரிபாதிதௌ தரூ

பொருள்: குருவாயூரப்பா! உரலில் கட்டுப்பட்ட நீ களைப்பு எதுவும் இல்லாமல் மெதுவாக நகர்ந்து சென்றாய். அந்த மரங்களுக்கு அருகில் சென்றாய். வெகு காலம் இருந்த காரணத்தினால் அவை உளுத்துப்போய் காணப்பட்டன. அந்த மரங்களுக்கு இடையில் உனது உரல் குறுக்காக மோதியது. இதனால் வலுவிழந்த அவை கீழே சாய்ந்தன.

7. அபாஜி சாகி த்விதயம் யதா த்வயா
ததா ஏவ தத் கர்ப தலாத் நிரேயுஷா
மஹா த்விஷா யக்ஷ யுகேந தத் க்ஷணாத்
அபாஜி கேவிந்த பவாந் அபி ஸ்தவை:

பொருள்: குருவாயூரப்பா! கோவிந்தா! அந்த இரண்டு மரங்களும் கீழே சாய்ந்த பின்னர் அவற்றின் நடுவில் இருந்து அழகான ஒளிமிக்க இரண்டு யக்ஷர்கள் வெளி வந்தனர். அவர்கள் உன்னைத் துதித்தனர். அல்லவா?

8. இஹ அந்ய பக்த: அபி ஸமேஷ்யதி க்ரமாத்
பவந்தம் ஏதௌ கலுருத்ர ஸே வகௌ
முநி ப்ரஸாதாத் பவத் அங்க்ரிம் ஆகதௌ
கதௌ வ்ருணா நௌ கலு பக்திம் உத்தமாம்

பொருள்: குருவாயூரப்பா! இந்தப் பூமியில் எந்தவித தேவதைகளை வணங்கும் பக்தர்களும் படிப்படியாக உன்னை வந்து அடைவார்கள் அல்லவா? இப்படியாக சிவனையே உபாஸித்து வந்த இவர்கள், நாரதரின் ஆசீர்வாதத்தால் உன்னையே சரணம் என்று அடைந்தனர். இதன் மூலம் உன்னிடம் உள்ள பக்தி நீங்காமல் இருக்க வேண்டும் என்று வரமாகப் பெற்றனர். அல்லவா?

9. தத: தரு உத்தாரண தாருண ஆரவ
ப்ரகம்பி ஸம்பாதிநி கோப மண்டலே
விலஜ்ஜித த்வத் ஜநநீ முக ஈக்ஷணா
வ்யமோக்ஷி நந்தேந பவாந் விமோக்ஷத:

பொருள்: குருவாயூரப்பா! அதன் பிறகு மரங்கள் விழுந்த ஒலி கேட்ட ஆயர்கள் அங்கு விரைந்து வந்தனர். மிகுந்த அச்சத்தால் அவர்கள் நடுங்கினர். (உரலில் உன்னைக் கட்டியதால்) மிகுந்த வெட்கம் கொண்டிருந்த உனது தாயை நந்தகோபர் கண்டார். அனைவருக்கும் மோட்சம் என்னும் விடுதலை அளிக்கும் உன்னை உரலில் இருந்து விடுவித்தார் அல்லவா?

10. மஹு ருஹோ: மத்ய கத: கத அர்பக:
ஹரே: ப்ரபாவாத் அபரிக்ஷத: அதுநா
இதி ப்ருவாணை: கமித: க்ருஹம் பவாந்
மருத் புராதீச்வர பாஹிமாம் கதாத்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நந்தகோபர் அனைவரிடமும், இந்த இரண்டு பெரிய மரங்களின் இடையே புகுந்து சென்ற குழந்தை, ஸ்ரீஹரியின் அருளால் எந்தவிதமான ஆபத்தும் இன்றி உள்ளது. இது எத்தகைய வியப்பு! என்று கூறினார். அதன் பின்னர் உன்னைத் தனது வீட்டிற்குத் தூக்கிச் சென்றார். இப்படியாக பல அதிசயங்கள் புரிந்த நீ என்னைக் காப்பாற்ற வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar