காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தவள் கோவில் ஆடி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2015 11:07
காஞ்சிபுரம்:கருக்கினில் அமர்ந்தவள் கோவில் ஆடி திருவிழாவில், அம்மன் ராஜவீதி சுற்றி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காஞ்சிபுரம் கிழக்கு ராஜவீதியில் உள்ள, கருக்கினில் அமர்ந்தவள் கோவிலில், நேற்று முன்தினம் ஆடி திருவிழா துவங்கியது. அன்று மாலை, கோவிலில் திருவிளக்கு பூஜை மற்றும் இரவு அம்மன் அலங்கரிக்கப்பட்டு ராஜவீதிகளில் சுற்றி வந்து அருள்பாலித்தார். இரவு 7:00 மணியளவில், அம்மன் ஊஞ்சல் உற்சவமும், இரவு, 8:00 மணியளவில் மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றன. பின், கும்பமிடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பல்லவர்மேடு கன்னியம்மன் கோவிலில் நடந்த ஆடி திருவிழாவில், பக்தர்கள் வேண்டுதலுக்காக அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அம்மனை அலங்கரித்து விதியுலா நடைபெற்றது.