Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவலோகநாதர் கோவிலில் விதை தெளி ... திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் பதியில் ஆடித்திருவிழா தேரோட்டம்! திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கல் உப்பு பூஜை!
எழுத்தின் அளவு:
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கல் உப்பு பூஜை!

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2015
10:07

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஏற்கனவே இருந்த பூஜை பொருளான வெண்ணெய் எடுக்கப்பட்டு, நேற்று முதல், கல் உப்பு வைத்து பூஜை நடக்கிறது.காங்கேயம் அடுத்த சிவன்மலை, மலை மீது சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. சிவவாக்கிய சித்தரால் பாடல் பெற்ற ஸ்தலமும், இம்மலை சிவன் வடிவத்தில் உள்ளதால் இதை சிவன்மலை என்றழைக்கின்றனர்.இக்கோவிலில், ஆண்டவர் உத்தரவு என எழுதப்பட்ட கண்ணாடி பேழை உள்ளது. இப்பேழையில், குறிப்பிட்ட பொருள் வைத்து தினமும் பூஜை செய்யப்படும். அவ்வாறு பூஜை செய்யப்படும் பொருளினால், சமுதாயத்தில் தாக்கம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதாவது பக்தர் ஒருவர், சிவன்மலை ஆண்டவர் கனவில் வந்து சொன்னதாகக் கூறி, ஒரு பொருளை கொண்டு வந்து தருவர். அப்பொருளை தேவஸ்தான ஊழியர்கள் பெற்று சுவாமி சன்னிதியில் வைத்து பூ கேட்பர். வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்கப்படும். வெள்ளை பூ விழுந்தால் மட்டுமே அப்பொருள் கண்ணாடி பேழையில் வைத்து தினமும் பூஜை செய்யப்படும். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கொங்கூரைச் சேர்ந்த சிவராம், 47, என்ற விவசாயியின் கனவில், ஆண்டவர், கல் உப்பு வைத்து பூஜிக்க பணித்துள்ளார். இதுபற்றி கோவில் சிவாச்சாரியார் கூறுகையில், தற்போது வைக்கப்பட்டுள்ள கல் உப்பு காரணமாக, உப்பு விலை ஏற்றம் உருவாகலாம். மேலும் கடுமையான உப்பு தட்டுப்பாடு ஏற்படவும், உப்பு சம்பந்தமாக நோய் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது என்றனர்.

முருகன் சொன்னார்: விவசாயி சிவராம் கூறியதாவது:கடந்த வைகாசி, 31ம் தேதி, முருகப்பெருமான் கனவில் வந்து, சிவன்மலை கோவிலில் கல் உப்பு வைத்து பூஜை செய் என்று கூறினார். நான், அந்த உத்தரவை சரியாக பின்பற்றவில்லை. மீண்டும் ஆடி, 4ம் தேதி, கனவில் முருகப்பெருமான் தோன்றி, உடனடியாக பூஜையில் உணவு உப்பான கல் உப்பு வைத்து பூஜை செய் என்று மட்டும் கூறி மறைந்தார்.உடன், சிவன்மலை கோவிலுக்கு சென்று, நடந்த விவரத்தை சொன்னேன். அதன்படி, கல் உப்பு பாக்கெட் கொடுத்தேன். தற்போது ஆண்டவர் உத்தரவு பேழையில், கல் உப்பு பாக்கெட் வைக்கப்பட்டு பூஜை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar