காரைக்கால் : காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் கந்தூரி திருவிழா கடந்த 11ளணதேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.காரைக்கால் பெரிய பள்ளிவாசல் என்று அழைக்கப்படும் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தார்கா கந்தூரி விழா 11ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பகல் 2.30 மணிக்கு ரதம், பல்லக்கு ஊர்வலம் நடந்தது. இதில் பல்வேறு வடிவங்களில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகள் ஊர்வலத்தில் பங்கெற்றன. ரதம் மற்றும் பல்லக்கு காரைக்காலின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது.இரவு 9 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. விழாவில் அனைத்து மத மக்களும் கலந்து கொண்டனர். வரும் 20ம் தேதி இரவு 10 மணிக்கு ஹலவு என்னும் போர்வை வீதி வலமும், இரவு 11.30 மணிக்கு மின்சார சந்தனக்கூடு புறப்படுதலும் நடக்கிறது. அதிகாலை 3.30 மணிக்கு வலியுல்லாஹ் ரவ்லா ஷரிபில் சந்தனம் பூசுதல் நடக்கிறது. 23ம் தேதி வலியுல்லாஹ் பேரில் குர்ஆன் ஷரீப், மவுலூது துஆ ஓதியப்பின் இரவு 9 மணிக்கு கொடி இறக்குதல் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை வக்பு நிர்வாக சபை செய்து வருகிறது.பள்ளிகளுக்கு உள்ளுர் விடுமுறை: பெரிய பள்ளிவாசல் கந்தூரி திருவிழாவையொட்டி நேற்று காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.