பதிவு செய்த நாள்
14
ஜூலை
2011
11:07
ஓசூர்: ஓசூர் லட்சுமி நாராயணா நகர் பஞ்சமுக விநாயகர் கோவிலில், எட்டாம் ஆண்டு கும்பாபிஷேக பூர்த்தி விழா நடந்தது. நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ய வாசனம், வாஸ்து சாந்தி, ரஷாபந்தனமும், இரவு 7 மணிக்கு கடஸ்தாபனம், முதற் காலயாக பூஜை, இரவு 9 மணிக்கு பூர்ணாஹுதி தீபாராதனை, பிரசாத விநியோகம் நடந்தது. நேற்று காலை 7.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, 9 மணிக்கு கோமாதா பூஜை, 10 மணிக்கு பூர்ணாஹுதி, 10.30 மணிக்கு கும்பாபிஷேக ÷ஷாடச கலச அபிஷேகம், 11.30 மணிக்கு அர்ச்சனை, தீபாராதனை, பக்தர்களுக்கு அன்னதானமும் மாலை 6.30 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவும், இரவு 7.30 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரம், அர்ச்சனை, மகா தீபாராதனை, பிரசாதம் விநியோகம் ஆகியவை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.