Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » காளியனுக்கு அனுக்ரஹம்
காளியனுக்கு அனுக்ரஹம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2015
17:47

1. ருசிர கம்பித குண்டல மண்டல
ஸீசிரம் ஈச நநர்த்தித பந்தகே
அமர தாடித துந்துபி ஸுந்தரம்
வியதி காயதி தைவத யௌவதே

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! (உனது நாட்டியத்திற்கு ஏற்ப) வாகனத்தில் தேவலோகப் பெண்கள் இனிமையாகப் பாடினார்கள்; தேவர்கள் துந்துபி என்ற வாத்தியத்தை முழங்கினர். நீ உனது இருகாதுகளில் அணிந்திருந்த குண்டலங்கள் மிகவும் அழகாக அசையும்படி வெகுநேரம் நடனம் ஆடினாய்.

2. நமதி யத் யத் அமுஷ்ய சிர: ஹரே
பரிவிஹாய தத் உந்நதம் உந்நதம்
பரிமதந் பத பங்க ருஹா சிரம்
வ்யஹரதா: கர தால மநோஹரம்

பொருள்: குருவாயூரப்பா! ஹரியே! ஆயிரம் தலைகள் உடைய அவனது தலைகளில் எவை உன்னை வணங்கிப் பணிந்தனவோ அவற்றை நீ விட்டு விட்டாய். உன்னைப் பணியாமல் மேலே எழுந்த தலைகளை உனது தாமரை போன்ற சிறிய பாதங்களால் மிதித்தபடியும். கைகளில் தாளம் போட்டுக் கொண்டும் தொடர்ந்து ஆடினாய்.

3. த்வத் அவபக்த விபுக்ந பணா கணே
கலித சோணித சோணித பாதஸி
பணி பதௌ அவஸீததி ஸந்நதா:
தத் அபலா தவ மாதவ பாதயோ:

பொருள்: குருவாயூரப்பனே! மாதவனே! நீ நடனம் ஆடும்போது மிதிபட்டதால் நசுங்கிய பல தலைகளை உடையவனும், தனது இரத்தத்தை அந்த மடு நிறைய நிரப்பியவனும், ஆகிய காளியன் சோர்ந்தான். அப்போது அவன் மனைவிகள் உனது கால்களில் விழுந்து வணங்கினர் அல்லவா?

4. அயி புரா ஏவ சிரயா பரிச்ருத
த்வத் அநுபாவ விலீந ஹ்ருத: ஹிதா:
முநிபி அபி அநவாப்ய பதை: ஸ்தவை:
நுநுவு: ஈச பவந்தம் அயந்த்ரிதம்

பொருள்: ஈசனே! குருவாயூரப்பா! காளியனின் மனைவிகள் உனது மகிமைகளை அறிந்தவர்களாக இருந்தனர். ஆகவே அவர்கள், முனிவர்கள் கூட உன்னை, அவ்வாறு துதிக்க இயலாதபடி, மிகவும் இயல்பாக, தடைகள் எதுவும் இன்றி உன்னைத் துதித்தனர்.

5. பணி வதூ கண பக்தி விலோகந
ப்ரவிகஸத் கருணா ஆகுல சேதஸா
பணி பதி: பவதா அச்யுத ஜீவித:
த்வயி ஸமர்ப்பித மூர்த்தி: அவா நமத்

பொருள்: அடியார்களை நழுவ விடாதவனே! குருவாயூரப்பா! அவர்கள் உன்னைத் துதித்ததைக் கண்டதும் அவர்கள் உனது மீது வைத்துள்ள பக்தியைக் கண்டு மனம் நெகிழ்ந்தாய். இதனால் காளியனுக்கு உயிரை அளித்தாய். அவன் தனது உடலை உனக்கே என்று ஒப்படைத்து உன் அடிக்கீழ் வணங்கினான் அல்லவா?

6. ரமணகம் வ்ரஜ வாரிதி மத்யகம்
பணி ரிபு: ந கரோதி விரோதிதாம்
இதி பவத் வசநாநி அதிமாநயந்
பணி பதி: நிரகாத் உரகை: ஸமம்

பொருள்: குருவாயூரப்பா! நீ காளியனிடம், காவியா! நீ இந்த மடுவை விட்டு அகன்று கடலில் உள்ள ரமணகம் என்ற தீவிற்குச் செல்ல வேண்டும். கருடன் உன்னை அங்கு எதுவும் செய்ய மாட்டான் என்றாய். இதனை ஏற்ற காளியன் அங்கு இருந்த ஏராளமான பாம்புகளை அழைத்துக் கொண்டு சென்றான்.

7. பணி வதூ ஜந தத்த மணி வ்ரஜ
ஜ்வலித ஹார துகூல விபூஷித:
தடகதை: ப்ரமதா அச்ரு விமிச்ரிதை:
ஸமகதா: ஸ்வ ஜநை: திவஸ அவதௌ

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! காளியனின் மனைவிகள் உனக்கு அளித்த இரத்தினக் கற்களாலும் ஒளி பொருந்திய மாலைகளாலும், பட்டு ஆடைகளாலும் நீ நன்றாக அலங்கரித்துக் காணப்பட்டாய். பின்னர் யமுனை நதியின் கரையில் ஆனந்தக் கண்ணீருடன் காத்திருந்த உனது சுற்றத்தாரிடம் சென்று சேர்ந்தாய் அல்லவா?

8. நிசி புந: தமஸா வ்ரஜ மந்திரம்
வ்ரஜிதும் அக்ஷம ஏவ ஜந உத்கரே
ஸ்வபிதி தத்ர பவத் சரண ஆச்ரயே
தவ க்ருசாநு: அருந்த ஸமந்தத:

பொருள்: குருவாயூரப்பா! இதற்குள் நன்றாக இருட்டி விட்டது. ஆகையால் உங்களால் அன்று இரவு ப்ருந்தாவனம் செல்ல இயலவில்லை. எனவே இடையர்கள் அனைவரும் உனது திருவடிகளையே துணையாகக் கொண்டு அங்கேயே படுத்து உறங்கினர். அப்போது திடீரென்று அனைத்துத் திசைகளிலும் பெரும் தீ சூழ்ந்து கொண்டது.

9. ப்ரபுதிதாந் அத பாலய பாலய இதி
உதயத் ஆர்த்த ரவாந் பசு பாலகாந்
அவிதும் ஆசு பபாத மஹாநலம்
கிம் இஹ சித்ரம் அயம் கலு தே முகம்

பொருள்: குருவாயூரப்பா! உடனே விழித்து எழுந்த ஆயர்கள் அனைவரும் காப்பாற்று காப்பாற்று என்று அலறினார்கள். அவர்களைக் காப்பதற்காக அங்கு உண்டான அந்த பெரும் காட்டுத்தீயை முழுவதுமாக நீ பருகிவிட்டாய் அல்லவா? இதில் வியப்பு என்ன வென்றால் அக்னி பிறந்ததே உனத வாயில்தான் அன்றோ?

10. சிகிநி வர்ணத ஏவ ஹி பீததா
பரிலஸதி அதுநா கிரியயா அபி அஸௌ
இதி நுத: பசுபை: முதிதை: விபோ
ஹர ஹரே துரிதை: ஸஹ மே கதாந்

பொருள்: ஹரியே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இதனைக் கண்ட ஆயர்கள், நெருப்பில் பீதம் என்பது (பீதம் என்றால் மஞ்சள் நிறம்) நிறத்தில் மட்டுமே இருந்தது. ஆனால் க்ருஷ்ணா! உன்னால் பீதம் என்பது (பீதம் என்பது குடித்தலையும் குறிக்கும்) செயல் பாட்டிலும் காணப்பட்டது என்று கூறினர். நீ எனது பிணிகளை மட்டும் அன்றி அவை தோன்றக் காரணமான பாவங்களையும் நீக்க வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar