கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், அவதார(மூல) நட்சத்திர பூஜை நடந்தது. முன்னதாக சுவாமி, நந்திக்கு பால், இளநீர், திருநீறு உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் நடந்தது. ராஜ அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. தேவார, திருவாசக பாராயணம், அன்னதானம் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.