நவசக்தி மாரியம்மன் கோவிலில் புதிய திருத்தேர் உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2015 12:08
புதுச்சேரி: பேட்டையான்சத்திரம் நவசக்தி மாரியம்மன் கோவிலில், வரும் 9ம் தேதி நடக்கும் புதிய திருத்தேர் வீதியுலாவை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைக்கிறார்.புதுச்சேரி பேட்டையான்சத்திரம், திலகர் நகரில் ஸ்ரீ நவசக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 14ம் ஆண்டு ஆடித்திருவிழா வரும் 9ம் தேதி துவங்கி, 10ம் வரை நடக்கிறது.கோவிலுக்கு புதிய தேர் செய்யப்பட்டு, அதில் அம்மன் வீதியுலா வரும் நிகழ்வு 9ம் தேதி நடக்கிறது. நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, தொகுதி எம்.எல்.ஏ., அசோக் ஆனந்து பங்கேற்று, புதிய திருத்தேர் வீதியுலாவை துவக்கி வைக்கின்றனர்.ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம், பொதுக்குழு மற்றும் ஊர் மக்கள் செய்துள்ளனர்.