பதிவு செய்த நாள்
04
ஆக
2015
12:08
காஞ்சிபுரம்:மதுரா வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள ஐயனாரப்பன் கோவில் திருவிழாவில், நேற்று, திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.அச்சிறுப்பாக்கம் அடுத்த, மதுரா வெங்கடேசபுரம் பகுதியில் பூர்ணா, புஷ்கலா சமேத ஐயனாரப்பன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா, நேற்று முன்தினம் துவங்கியது.நேற்று, காலை 10:30 மணியளவில், பகுதிவாசிகள் பொங்கல் வைத்து, சுவாமிக்கு படைத்தனர். மாலை 6:30 மணியளவில், ஐயனாரப்பனுக்கும் பூர்ணா, புஷ்கலா தேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.இரவு 9:30 மணியளவில், திருக்கல்யாண கோலத்தில் ஐயனாரப்பன் பூர்ணா, புஷ்கலா தேவியருடன் வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.