பதிவு செய்த நாள்
04
ஆக
2015
12:08
மீஞ்சூர்:மேலுார், திருவுடையம்மன் கோவிலில், ஆடி திருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது.மீஞ்சூர் அடுத்த மேலுார் கிராமத்தில், திருவுடையம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதத்தை முன்னிட்டு, அம்மனுக்கு ஒவ்வொரு வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெறுகின்றன. இக்கோவிலுக்கு பிரதோஷம், விஜய தசமி, ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், சித்ரா பவுர்ணமி போன்ற நாட்களில், திருவுடையம்மனை தரிசிக்க, அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.மேலுார் ஊராட்சி தலைவர் கோவிந்தராஜன், ஒன்றிய கவுன்சிலர் சுதியன், கோவில் நிர்வாக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் கிராம மக்கள், விசேஷ நாட்களில் விழா ஏற்பாடுகளை முன்னின்று மேற்கொண்டு வருகின்றனர். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ராஜகோபுரம் அமைக்கவும், திருப்பணிகளை மேற்கொள்ளவும் வேண்டும் என்பது மேலுார் பகுதிவாசிகளின் எதிர்பார்ப்பாகும்.