Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பொங்களாயி அம்மன் கோவில் விழா:ஆண்கள் ... கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஆடி பெருக்கு விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஆக
2015
12:08

அரூர்: அரூர் அடுத்த, டி.அம்மாப்பேட்டையில் உள்ள சென்னியம்மன் கோவிலில், ஆடிப்பெருக்கு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.அரூர் அடுத்த டி.அம்மாப்பேட்டையில் தென்பெண்ணை ஆற்றங்கரையில், சென்னியம்மன் இக்கோவிலில், நேற்று ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் மற்றும் வேலூர், கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். ஆற்றில் உள்ள பாறைகளுக்கு, பொறி, கடலை, அவல் உள்ளிட்டவைகளை தூவி பூஜை செய்து வழிபாடு செய்த பின்பு, ஆடு, கோழியை பலியிட்டனர். மேலும், தற்போது ஆற்றில் தண்ணீர் இல்லாததால், பக்தர்கள் நீராடவும் சமைக்கவும், குடிநீருக்கும் மிகவும் அவதிப்பட்டனர். விலை கொடுத்து தண்ணீரை வாங்கினர் பயன்படுத்த வேண்டிய அவலநிலை உள்ளது. கழிப்பறை வசதியும் இல்லாததால் பெண்கள் மிகவும் சிரமப்பட்டனர். கிருஷ்ணகிரி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட்ட போதிலும் தெண்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வராததால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும், விழாவுக்கு வந்த பக்தர்களிடம் இருகரம் மற்றும் நான்கு கர வாகனங்களுக்கு, 50 ரூபாய் முதல், 100 ரூபாய் என, சுங்க கட்டணம் என கூறி வசூல் செய்ததால் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, அரூரில் இருந்து டி.அம்மாப்பேட்டைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. போலீஸ் டி.எஸ்.பி., தட்சிணாமூர்த்தி, தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar