பொள்ளாச்சி : கடவுளிடம் பக்தி கொண்டால் நன்மை பெறலாம். கருட சேவைக்கு சென்று பெருமாளை தரிசிப்பது மிகவும் புண்ணியமாகும், என துஸ்யந்த் ஸ்ரீதர் பேசினார். பொள்ளாச்சி கே.கே.ஜி., கல்யாண மண்டபத்தில், ஸ்ரீமத் பாகவத சொற்பொழிவு நிகழ்ச்சி கடந்த 2ம் தேதி முதல் நடந்து வருகிறது. வராஹ அவாதரம் கபில அவதாரம் என்ற தலைப்பில், துஸ்யந்த் ஸ்ரீதர், பெருமாள் வராஹ அவதாரம் குறித்து பேசினார். தொடர்ந்து அவர் பேசுகையில், கடவுளிடம் தூய்மையான பக்தி இருக்க வேண்டும்; அடக்கத்தோடு இருக்கணும், வீட்டு நலனில் அக்கறை செலுத்த வேண்டும். செய்த தவறை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.கடவுளிடம் பக்தி கொண்டால் நன்மை பெறலாம். கருட சேவையில் அருள்பாலிக்கும் பெருமாளை தரிசிப்பது மிகவும் புண்ணியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.