திருத்தணி: ஊராட்சியில் நடந்த ஜாத்திரை திருவிழாவில், திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்.திருத்தணி ஒன்றியம், சின்னகடம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட சின்னகடம்பூர், மோடூர் அருந்ததி காலனியில், கங்கையம்மன் கோவில் ஜாத்திரை திருவிழா நேற்று நடந்தது. விழாவை ஒட்டி, ரேணுகாம்பாள் கோவிலில், மூலவருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் கூழ் வார்த்தல் நடந்தது. மாலை, பூ கரகம் ஊர்வலம் நடந்தது. இரவு 7:30 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூ கரகத்துடன், காலனியில் உள்ள அனைத்து தெருக்களில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். தொடர்ந்து நாடகம் நடந்தது.