தேவகோட்டை : தேவகோட்டை சகாயஅன்னை சர்ச்சில் நவநாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பாதிரியார் பாஸ்டின் முன்னிலையில் பாதிரியார் திரவியம் கொடியேற்றி வைத்தார். பேரவைத்துணை தலைவர் ராஜ துரை உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர். முதல் நாள் சிறப்பு திருப்பலி நடந்தது.தொடர்ந்து மறையுரை நிகழ்த்தினர். ஆக. 15 தேர்பவனி நடைபெறுகிறது.