பதிவு செய்த நாள்
07
ஆக
2015
04:08
1. யத்நேஷு ஸர்வேஷு அபி ந அவகேசீ
கேசீ ஸ: போஜ ஈசி து: இஷ்ட பந்து:
த்வம் ஸிந்து ஜா அவாப்ய: இதி இவ மத்வா
ஸம்ப்ராப்தவாந் ஸிந்துஜ வாஜி ரூப:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! போஜ அரசனான கம்சனின் நண்பனாக உள்ளவனும், எடுத்த காரியங்களை இடையூறு எதுவும் இன்றி முடிப்பவனும் ஆகிய கேசி என்பவன் உன்னைப் பற்றி என்ன நினைத்தான்? நீ ஸிந்துவில் (ஸிந்து = கடல்) பிறந்தவளால் (ஸிந்துவில் பிறந்தவள் = கடலில் பிறந்தவள் = மஹாலக்ஷ்மி) எளிதில் அடையக்கூடியவன் என்று நினைத்தான். ஆகவே அவன் ஸிந்துஜ வடிவில் (ஸிந்துஜ = ஸிந்து நாட்டில் தோன்றிய குதிரை) உன்னை அழிக்க வந்தானாமே!
2. கந்தர்வதாம் ஏஷ: கத: அபிரூஷை:
நாதை: ஸமுத்வேஜித ஸர்வ லோக:
பவந் விலோக அவதி கோப வாடீம்
ப்ரமர்த்ய பாப: புந: ஆபதத் த்வாம்
பொருள்: குருவாயூரப்பா! மிகுந்த பாவியாகிய கேசி உயர்ந்த குதிரை வடிவம் கொண்டான். (குதிரை என்பதற்கு கந்தர்வன் என்ற பொருள் உண்டு). அப்படி இருந்தாலும் (கந்தவர்களுக்கு உரிய குணங்கள் எதுவும் இன்றி) தனது அச்சம் விளைவிக்கும் ஓசைகளால் அவன் மக்களை பயம் கொள்ளச் செய்தான். உன்னை அவன் காணும்வரை கோகுலத்தில் உள்ள மக்களைத் துன்புறுத்தினான் அல்லவா?
3. தார்க்ஷ்ய அர்ப்பித அங்க்ரே: தவ தார்க்ஷ்ய ஏஷ
சிசேஷப வக்ஷ: புவி நாம பாதம்
ப்ருகோ: பத ஆகாத கதாம் நிசம்ய
ஸ்வநே அபி சக்யம் தத் இதி இவ மோஹாத்
பொருள்: குருவாயூரப்பா! குதிரை வடிவம் கொண்ட இந்த அசுரன் (தார்க்ஷ்யந்), உன்னைப் ப்ருகு முனிவர் தனது கால்களால் உதைத்ததை எண்ணி, தானும் அதே போல் உதைக்க இயலும் என்று சிந்தித்தான். பின்னர் கருடனின் (தார்க்ஷ்ய) மார்பின் மீது பாதங்கள் பதித்த உன்னை உனது மார்பில் தனது கால்களால் உதைத்தானாமே!
4. ப்ரவஞ்சயந் அஸ்ய குர அஞ்சலம் த்ராக்
அமும் ச விக்ஷேபித தூர தூரம்
ஸ: மூர்ச்சித: அபி ஹி அதி மூர்ச்சிதேந
க்ரோத ஊஷ்மணா காதிதும் ஆத்ருத: த்வாம்
பொருள்: குருவாயூரப்பா! அவன் உன்னை உதைத்தபோது நீ அவனது குளம்புகள் உன்மீது படாதபடி சாமர்த்தியமாக விலகினாய். அதே நேரம் அவனை உனது கால்களால் உதைத்து அவன் வெகு தூரம் சென்று விழுமாறு செய்தாய். அவன் தூரத்தில் விழுந்து மயக்கம் உற்றான். இருந்தாலும் எழுந்த அவன் மிகுந்த கோபத்துடன் உன்னை விழுங்க வேகமாக ஓடி வந்தானாமே!
5. த்வம் வாஹ தண்டே க்ருத தீ: ச பாஹ
தண்டம் ந்யதா: தஸ்ய முகே ததாநீம்
தத் வ்ருத்தி ருத்த ச்வஸந: கத அஸ:
ஸுப்தோபவந் அபி அயம் ஐக்யம் ஆகாத்
பொருள்: குருவாயூரப்பா! நீ அந்தக் குதிரையைத் தண்டிப்பதில் (பாஹ தண்டே) மிகுந்த உறுதி கொண்டாய். ஆகையால் அவனது வாயில் தடி போன்று உனது கையை (பாஹ தண்டம்) நுழைத்தாய் அல்லவா? இதனால் அவனது சுவாசம் தடைப்பட்டது. அவன் மூச்சுத்திணறி, குதிரையாக இருந்தபோதிலும் உன்னுடன் ஐக்கியமாகி மோட்சம் பெற்றான்.
6. ஆலம்ப மாத்ரேண பசோ: ஸுராணாம்
ப்ரஸாதகே நூத் ந இவ அச்வ மேதே
க்ருதே த்வயா ஹர்ஷ வசாத் ஸுர இந்த்ரா:
த்வாம் துஷ்டுவு: கேசவ நாமதேயம்
பொருள்: குருவாயூரப்பா! மந்திரங்கள் அல்லது பகவதை போன்றவை கொண்டு இயற்றும் யாகங்களே தேவர்களுக்கு மகிழ்வு அளிக்கும். ஆனால் நீயோ இது எதுவும் இல்லாமலே குதிரையை அழித்து அச்வமேத யாகம் இயற்றினாய். இதனைக் கண்டு மகிழ்ந்த தேவர்கள். உனக்கு (கேசி என்பவனை அழித்தவன் என்று பொருள் வருமாறு) கேசவன் என்று பெயர் வைத்தனர்.
7. கம்ஸாய தே சௌரி ஸுத: த்வம் உக்த்வா
தம் தத் வத உத்கம் ப்ரதிருத்ய வாசா
ப்ராப்தேந கேசி க்ஷபண அவஸாநே
ஸ்ரீநாரதேந த்வம் அபிஷ்டுத: அபூ:
பொருள்: குருவாயூரப்பா! அப்போது நாரத முனிவர் கம்சனிடம் சென்று நீ வசுதேவரின் மகன் என்று கூறினார். உடனே அவனும் கோபம் கொண்டு வசுதேவரைக் கொல்லத் தயாராகப் புறப்பட்டான். ஆயினும் நாரதர் அவனை நல்வார்த்தை கூறித் தடுத்தார். அந்த நேரம் கேசி வதம் முடிந்தது. நாரதரும் உன்னை வந்து துதித்தார் அல்லவா?
8. கதாபி கோபை: ஸஹ காநந அந்தே
நிலாய க்ரீடந லோலுபம் த்வாம்
மய ஆத்மஜ: ப்ராப துரந்த மாய:
வ்யோம அபித: வ்யோம சர உபரோதீ
பொருள்: குருவாயூரப்பா! ஒரு முறை நீ ஆயர் சிறுவர்களுடன் காட்டில் ஒளிந்து விளையாடும் விளையாட்டை அனுபவித்துக் கொண்டிருந்தாய். அப்போது தேவர்களைத் துன்புறுத்துவதில் வல்லவனும், மயன் என்ற அசுரனின் மகனும் ஆகிய வ்யோமன் என்ற அசுரன் அங்கு வந்தான் அல்லவா?
9. ஸ சோர பாலாயித வல்லவேஷு
சோராயித: கோப சிசூந் பசூந் ச
குஹாஸு க்ருத்வா பிததே சிலாபி:
த்வயா ச புத்வா பரிமர்தித: அபூத்
பொருள்: குருவாயூரப்பா! அந்த ஆயர் சிறுவர்கள் திருடர்களாக ஒரு பிரிவும், காவலர்களாக ஒரு பிரிவும் ஆகப் பிரிந்து விளையாடினர். அவர்களில் திருடர் பிரிவில் ஒருவனாக, தந்திரமான முறையில், அந்த அசுரன் நுழைந்தான். அப்போது மிகவும் வஞ்சகமாக ஆயர் சிறுவர்களையும், பசுக்களையும் ஒரு பெரிய குகையில் அடைத்து, அதன் வாயிலை ஒரு பெரிய கல்லைக் கொண்டு மூடியும் விட்டான் அல்லவா? இதனை அறிந்த நீ உடன் அங்கு சென்று அவனைக் கொன்றாயாமே!
10. ஏவம் விதை: ச அத்புத கேளி பேதை:
ஆநந்த மூர்ச்சாம் அதுலாம் வ்ரஜஸ்ய
பதே பதே நூதநயந் அஸீமாம்
பர ஆத்ம ரூபிந் பவந ஈச பாயா:
பொருள்: பரமாத்ம ஸ்வரூபமே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! இப்படியாக உனது பலவிதமான அற்புத விளையாட்டுக்கள் மூலம் வ்ரஜ பூமியில் இருந்த ஆயர்களுக்கு மிகுந்த ஆனந்தத்தை அளித்தாய். மேலும் எல்லையில்லாத பல லீலைகளாலும், புதிது புதிதான லீலைகளாலும் அவர்களை நீ மயக்கினாய். இப்படிப்பட்ட நீ என்னைக் காக்க வேண்டும்.