Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஸ்ரீமந் நாராயணீயம் » அக்ரூரர் ப்ருந்தாவனம் வருதல்
அக்ரூரர் ப்ருந்தாவனம் வருதல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2015
16:36

1. கம்ஸ: அதி நரா கிரா வ்ரஜ வாஸிநம் த்வாம்
ஆகர்ண்ய தீர்ண ஹ்ருதய ஸ ஹி காந்திநேயம்
ஆஹுய கார்முக மக சலத: பவந்தம்
ஆநேதும் ஏநம் அஹிநோத் அஹிநாத சாயிந்

பொருள்: ஆதிசேஷன் மீது சயனித்தவனே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ வ்ரஜ பூமியில் உள்ளதாக நாரதர் கம்ஸனிடம் கூறினார். இதனைக் கேட்ட கம்ஸன் மனம் கலங்கினான். அச்சம் கொண்டான். உடனே அவன், காந்தினி என்பவரின் மகனான அக்ரூரன் என்பவனை அழைத்தான். தனுர்யாகம் என்ற பெயரில் தனது அரண்மனைக்கு அழைத்துவர அவனை உன்னிடம் அனுப்பினான்.

2. அக்ரூர: ஏஷ பவத் அங்க்ரி பர: சிராய
த்வத் தர்சந அக்ஷம மநா: க்ஷிதி பால பீத்யா
தஸ்ய ஆஜ்ஞயா ஏவ புந: ஈக்ஷிதும் உதயத: த்வாம்
ஆநந்த பாரம் அதிபூரிதரம் பபார

பொருள்: குருவாயூரப்பா! அந்த அக்ரூரர் உன்னைக் கண்டு உன் தரிசனம் பெற வேண்டும் என்று பல நாட்களாக எண்ணம் கொண்டிருந்தார். ஆயினும் கம்ஸனிடம் இருந்த பயத்தால் அவர் உன்னைக் காண வரத் துணியவில்லை.  இப்போது கம்ஸானே வ்ரஜ பூமிக்குச் செல்லும்படி கட்டளை இட்டான். இதனால் உன்னைக் காணும் வாய்ப்பு தானாகவே கிட்டியதை எண்ணி அக்ரூரரின் மனம் பெரும் ஆனந்தம் அடைந்தது.

3. ஸோயம் ரதேந ஸுக்ருதோ பவத: நிவாஸம்
கச்சந் மநோரத கணாம் த்வயி தார்ய மாணாந்
ஆஸ்வாதயந் முஹு: அபாய பயேந தைவம்
ஸம்ப்ரார்த்தயந் பதி ந கிஞ்சித் அபி வ்யஜாநாத்

பொருள்: குருவாயூரப்பா! மிகுந்த புண்ணியம் செய்திருந்த அந்த அக்ரூரர் தனது தேரில் ஏறி நீ வாசம் செய்யும் இடமான வ்ரஜ பூமிக்கு விரைந்தார். அவர் உன்னிடம் அனுபவிக்க வேண்டும் என்று மனதில் வைத்திருந்த தனது விருப்பங்களை வழி முழுவதும் எண்ணிக் களித்தார். அந்த விருப்பங்கள் நிறைவேறாது போய்விடுமோ என்று பயந்து தெய்வத்தை வேண்டிக் கொண்டார். இதனால் தனது பாதையில் இருந்த எதையுமே அவர் உணரவில்லை.

4. த்ரக்ஷ்யாமி வேத சத கீத கதிம் புமாம்ஸம்
ஸ்ப்ரக்ஷ்யாமி கிம் ஸ்வித் அபி நாம பரிஷ்வஜேயம்
கிம் வக்ஷ்யதே ஸ: கலு மாம் க்வநு வீக்ஷித: ஸ்யாத்
இத்தம் நிநாய ஸ பவத் மயம் ஏவ மார்க்கம்

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! வேதங்கள் நூற்றுக்கணக்கான ஸ்லோகங்கள் மூலம் அவனைப் புகழ்கின்றன. அவை கூறும் வழிகள் மூலம் அடைய வேண்டிய அவனை நான் பார்க்க இயலுமா? தொட இயலுமா? அணைத்துக் கொள்ள முடியுமா? என்னிடம் அவன் பேசுவானா? அவன் எங்கு இருப்பான்? என்று தனது மனதில் அக்ரூர் சிந்தித்தார். அந்த வழி முழுவதும் நீ உள்ளதாகவே எண்ணி வந்தாராமே!

5. பூய: க்ரமாத் அபிவிசந் பவத் அங்க்ரி பூதம்
ப்ருந்தாவநம் ஹர விரிஞ்ச ஸுர அபிவந்த்யம்
ஆநந்த மக்ந இவ லக்ந இவ ப்ரமோஹே
கிம் கிம் தசாந்தரம் அவாப ந பங்கஜ அக்ஷ

பொருள்: குருவாயூரப்பா! தாமரை போன்ற அழகான கண்களை உடையவனே அந்தப் ப்ருந்தாவனம் உனது கால் அடிகள் பட்டதால் மிகவும் புண்ணியமான பூமியானது. (இதனால்) சிவன், ப்ரும்மா ஆகியோர் வணங்கும் இடமாக ஆனது இப்படிப்பட்ட ப்ருந்தாவனத்திற்கு அக்ரூரர் வந்தார். அவர் அங்கு நுழைந்தவுடன் ஆனந்தக் கடலில் மூழ்கியவராகவும். மெய்ம் மறந்து உள்ள நிலையினை அடைந்தவராகவும் ஆனார். இப்படியாக அவர் அனுபவித்த இன்பங்கள் எத்தனை எத்தனை?

6. பச்யந் அவந்தத பவத் விஹ்ருதி ஸ்தலாநி
பாம்ஸுஷு அவேஷ்டத பவத் சரண அங்கிதேஷு
கிம் ப்ரூமஹே பஹு ஜநா: ஹி ததா அபி ஜாதா
ஏவம் து பக்தி தரலா விரலா: பர ஆத்மந்

பொருள்: குருவாயூரப்பா! பரம் பொருளே! அக்ரூரர் நீ விளையாடிய இடங்களைக் கண்டு வணங்கினார். உனது கால் அடிகள் பதிந்திருந்த அந்த பூமியில் விழுந்து புரண்டார். அவரது நிலையை நான் எப்படிக் கூறுவேன்? உனது காலத்தில் பல பக்தர்கள் பிறந்திருந்த போதிலும், அக்ரூரர் அளவிற்குப் பக்திப் பரவசம் பெற்றவர்கள் சிலரே!

7.ஸாயம் ஸ கோப பவநாநி பவத் சரித்ர
கீத அம்ருத ப்ரஸ்ருத கர்ண ரஸாயநாநி
பச்யந் ப்ரமோத ஸரிதா இவ கில  ஊஹ்யமாந:
கச்சந் பவத் பவந ஸந்நிதம் அந்வயாஸீத்

பொருள்: குருவாயூரப்பா! அக்ரூரர் ப்ருந்தாவனம் வந்து சேர்ந்த வேளை மாலை வேளையாகும். அப்போது அனைத்து கோபர்களின் வீடுகளில் இருந்தும் உனது லீலைகளைப் பற்றிய இனிமையான பாடல்கள் ஒலித்தன. அவை காதுகளுக்கு மிகுந்த இன்பம் அளிப்பதாக இருந்தன. அந்த வீடுகளைப் பார்த்துக் கொண்டே அக்ரூரர் சென்றார். அந்த கானம் என்னும் வெள்ளத்தில் அடித்து அழைத்து வரப்பட்டவராக உனது வீட்டின் வாயிலில் வந்து நின்றாராமே!

8. தாவத் ததர்ச பசு தோஹ விலோக லோலம்
பக்த உத்தம ஆகதிம் இவ ப்ரதி பாலயந்தம்
பூமந் பவந்தம் அயம் அக்ரஜவந்தம் அந்த:
ப்ரஹ்ம அநுபூதி ரஸ ஸிந்தும் இவ உத்வமந்தம்

பொருள்: குருவாயூரப்பா! எங்கும் உள்ளவனே! அக்ரூரர் வந்த நேரத்தில் நீ பசுக்கள் பால் கறப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாய். உனது அண்ணனான பலராமன் அருகில் இருந்தான். நீ உனது சிறந்த பக்தன் ஒருவன்  வரப்போகிறான் என மிகவும் ஆவலுடன் காணப்பட்டாய். இதனால் உனது உள்ளம் ஆனந்தம் நிரம்பி அது வெளி வருவது போல் காட்சி அளித்தாய். இப்படியாக உன்னை அக்ரூரர் கண்டார் அல்லவா?

9. ஸாயந்தந ஆப்லவ விசேஷ விவிக்த காத்ரௌ
த்வௌ பீத நீல ருசிர அம்பர லோபநீயௌ
நாதி ப்ரபஞ்ச த்ருத பூஷண சாரு வேஷௌ
மந்த ஸ்மித ஆர்த்ர வதநௌ ஸ: யுவாம் ததர்ச

பொருள்: குருவாயூரப்பா! மாலை வேளையாக இருந்ததால் நீயும் உனது அண்ணனும் குளித்து விட்டு மிகவும் சுத்தமாக நின்றீர்கள். நீ மஞ்சள் பட்டும், உனது அண்ணன் நீலப்பட்டும் அணிந்திருந்தீர்கள். உங்கள் உடலில் சிறிது மட்டுமே ஆபரணங்கள் இருந்ததால் மிகவும் அழகாகவே இருந்தீர்கள். இருவரின் முகத்திலும் புன்னகை அரும்பியது. இப்படியாக உன்னை அக்ரூரர் கண்டாராமே!

10. தூராத் ரதாத் ஸமவருஹ்ய நமந்தம் ஏநம்
உத்தாப்ய பக்த குல மௌலிம் அத உபகூஹந்
ஹர்ஷாத் மித அக்ஷர கிரா குசல அநுயோகீ
பாணிம் ப்ரக்ருஹ்ய ஸபல: அத க்ருஹாத் நிநேய

பொருள்: குருவாயூரப்பா! அப்போது தூரத்தில் தனது தேரில் இருந்து அக்ரூரர் இறங்கி உன்னிடம் வந்து வணங்கினார். பக்தர்களில் உயர்ந்தவரான அவரை நீ தூக்கி எழுப்பி மிகுந்த அன்புடன் அணைத்துக் கொண்டாய். இருவரின் உள்ளமும் மகிழ்ந்ததால் சொற்கள் வரவில்லை. குறைந்த சொற்கள் மட்டுமே கொண்டு அவரை நீ நலம் விசாரித்தாய். பின்னர் நீயும் பலராமனும் சேர்ந்து அவரது கைகளைப் பிடித்து உங்கள் வீட்டிற்குள் அழைத்துச் சென்றீர்கள் அல்லவா?

11. நந்தேந ஸாகம் அமித ஆதரம் அர்சயித்வா
தம் யாதவம் தத் உதிதாம் நிசமய்ய வார்த்தாம்
கோபேஷு பூபதி நிதேச கதாம் நிவேத்ய
நாநா கதாபி இஹ தேந நிசாம் அநைஷீ:

பொருள்: குருவாயூரப்பா! யாதவ குலத்தில் பிறந்தவரான அந்த அக்ரூரரை நந்தகோபர் உட்பட நீங்கள் அனைவரும் வெகுவாக கௌரவம் செய்தீர்கள். பின்னர் அவர் கம்சனிடம் இருந்த உங்களுக்கு வந்த அழைப்பைக் கூறினார். அதன் பின்னர் உன் வீட்டில் அன்று இரவு முழுவதும் அக்ரூரருடன் பலவிதமான கதைகளைப் பேசிக் கழித்தாயாமே!

12. சந்த்ரா க்ருஹே கிம் உத சந்த்ரபகா க்ருஹே நு
ராதா க்ருஹே நு பவநே கிமு மைத்ரவிந்தே
தூர்த: விலம்பத இதி ப்ரமதாபி உச்சை:
ஆசங்கித: நிசி மருத் புரநாத பாயா:

பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! (நீ அன்று இரவு வராதது கண்டு) கோபிகைகள், இந்தக் க்ருஷ்ணன் ஏன் வரவில்லை? அவன் சந்திராவின் வீட்டிலோ, சந்த்ரபகா வீட்டிலோ, ராதாவின் வீட்டிலோ அல்லது மித்திர விந்தையின் வீட்டிலோ தங்கி விட்டான் போல் உள்ளதே! என்று சந்தேகம் கொண்டனர். இப்படியாக பல லீலைகள் புரிந்த நீ என்னைக் காப்பாற்ற வேண்டும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar