காரைக்குடி: காரைக்குடி செக்காலை தூய சகாய மாதா ஆலய விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
புதிதாக அமைக்கப்பட்ட கொடி மரத்தினை பாதிரியார் வின்சென்ட் அமல்ராஜ் அர்ச்சித்தார். சகாய மாதா உருவம் அடங்கிய கொடியினை திருச்சி மறைமாவட்ட முதன்மை குரு யூஜின் ஏற்றினார். தொடர்ந்து நவநாள் திருப்பலி நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான திருவிழா திருப்பலி வருகிற 15-ம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து தேர்பவனியும், நற்கருணை ஆசிரும் நடக்கிறது. 16-ம் தேதி காலை நற்கருணை திருப்பலி, கொடியிறக்கம் நடக்கிறது. நவ நாட்களில் தினசரி மாலை 5.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது. ஏற்பாடுகளை பங்கு பேரவையினர், பணிக்குழுவினர், இறை மக்கள் செய்து வருகின்றனர்.