அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேக பணிஅறநிலையத்துறை கூடுதல் செயலர் ஆய்வு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2015 02:08
திருவண்ணாமலை:திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேக பணி குறித்து அறநிலையத்துறை கூடுதல் செயலர் கண்ணன் நேரில் ஆய்வு செய்தார்.திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவில் கும்பாபிஷேகம், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம், அதன்படி, கடந்த 2002ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இதையடுத்து, இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்காக கோவிலின் கோபுரங்கள், சன்னதிகள், 27 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணி கடந்த ஜனவரி 26ம் தேதி தொடங்கியது. தற்போது கோவிலின் ராஜகோபுரம் உள்ளிட்ட, 9 கோபுரங்களுக்கும் சாரம் கட்டும் பணி முடியும் தருவாயில் உள்ளது.கும்பாபிஷேக பணிகள் குறித்து, நேற்று அண்ணாமலையார் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் செயலர் கண்ணன் ஆய்வு செய்தார். அப்போது ராஜகோபுரத்தின் மேல் ஏறி சென்று ஆய்வு நடத்தினார். அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்வது குறித்து அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது கோவில் இணை ஆணையர் செந்தில்வேலவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.