பதிவு செய்த நாள்
16
ஜூலை
2011
11:07
புதியம்புத்தூர் : புதியம்புத்தூர் செல்வ விநாயகர் பத்திரகாளியம்மன் கோயில் ஆனித்திருவிழா நடந்தது. முதல்நாள் நிகழ்ச்சியான வில்லிசையுடன் ஆனித்திருவிழா ஆரம்பமானது 2ம் நாள் ஆன்மீக கச்சேரி நடந்தது. 3ம் நாளில் சாமிகளுக்கும், அம்மன்களுக்கும் மாக்காப்பு சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. 3ம் நாளில் காலை பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. மதியம் அன்னதானம் நடந்தது. மாலை உறவின்முறை நந்தவனத்தில் தீர்த்தம் எடு த்து ஊர்வலம் வந்து கோயி லை அடைந்தனர். இரவு சாமிகளுக்கும், அம்மன்களுக்கும் மாலை சாத்துதல் நிகழ்ச்சியும், சாமக்கொடை தீபாராதனையும் நடந்தது. கோயில் மைதானத்தில் கரகாட்ட நிகழ்ச்சி நடந்தது. 4வது நாளில் காலையில் பொங்கலிடுதல், சிறப்புபூஜை தீபாராதனை நடந்தது. மாலையில் கிடாய் அழைப்பு நிகழ்ச்சியும், சிறப்பு பூஜையும் நடந்தது. இரவு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. பிளஸ் 2 தேர்வில் முதலாவதாக வந்த மாணவனுக்கு 1 பவுன் தங்க நாணயத்தை லயன்ஸ்கிளப் கவர்னர் ராமசாமியும், 2வது மாணவிக்கு அறங்காவல் குழு செயலாளர் ராஜா, 1/2 பவுன் தங்க நாணயமும், தமிழ், கணிதம், ஆங்கிலம் பாடங்களில் முதலாவதாக தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், பிளஸ் 2 பாடத்தில் 3ம் இடம் பெற்ற மாணவர்களுக்கும் கணேசன், ஆறுமுகச்சாமி, மனோகர், நிர்வாக குழு ஆறுமுகச்சாமி ஆகியோர் 1/2 பவுன் தங்க நாணயங்களை வழங்கினர். 5ம் நாளில் சாலமன் பாப்பையா குழுவினரின் பட்டிமன்றமும், 6ம் நாளில் செல்வவிநாயகர் கலைக்குழு சார்பாக இன்னிசை கச்சேரியும், 7ம் நாளில் பட்டிமன்றமும் நடந்தது. 8ம் நாள் நிகழ்ச்சியாக சக்தி நண்பர்குழு சார்பாக பட்டிமன்றமும், சிறுவர், சிறுமியர் நடன நிகழ்ச்சியும், நாடகமும் நடந்தது.