பதிவு செய்த நாள்
11
ஆக
2015
02:08
மதுரை,: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடக்கும் ஆடி அமாவாசை விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகளை அறநிலையத்துறை செய்துள்ளது. மலைப்பாதைகளில் பள்ளமான இடங்களில் மணல் மூடைகள் போடப்பட்டு பாதைகள் சரி செய்யப்பட்டுள்ளன. சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில் பகுதியில் 4 கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன. குடிநீர் தொட்டிகள், குளிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தாணிப்பாறை, படிவெட்டுப்பாறை, சங்கிலிப்பாறை, பிலாவடி கருப்பு கோயில் பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் பகுதி, பிலாவடி கருப்பு கோயில், படிவெட்டுபாறை, இரட்டை லிங்கம், வாழைத்தோப்பு பகுதிகளில் தகவல் மையங்கள் மற்றும் ஜெனரேட்டர் மின் விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.ஆக., 8 முதல் 18 வரை காலை 6 முதல் மாலை 4 மணி வரை கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படுவர் என அறநிலையத்துறை இணை கமிஷனர் பச்சையப்பன் தெரிவித்துள்ளார்.