மேட்டுப்பாளையம் :மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு, மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் சர்ச் பங்கு மக்கள் சார்பில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.சர்ச்சில் திருப்பலி முடிந்ததும், அஞ்சலி ஊர்வலம் துவங்கியது. நிகழ்ச்சிக்கு பங்கு பாதிரியார் ஜார்ஜ் ரொசாரியா தலைமை வகித்தார். ஊர்வலம், சர்ச்சிலிருந்து புறப்பட்டு, பஸ் ஸ்டாண்ட், அண்ணாஜி ரோடு, பெண்கள் மேல்நிலைப்பள்ளி வழியாக மீண்டும் சர்ச்சை அடைந்தது. இதில், பாதிரியார் ஹெட்வின், பிரதர் அலெக்ஸ் மற்றும் பங்கு மக்கள் சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இளைஞர் அமைப்பினர் செய்திருந்தனர்.