ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆஞ்சநேயர் கோயில் சிறப்பு ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2015 11:08
நிலக்கோட்டை: நாளை ஆடி அமாவாசையை முன்னிட்டு அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஆடி அமாவாசை நாளில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி முன்னோர்களுக்கு திவசம் கொடுத்தல் சிறப்பு பெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயில் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளதால், புனித நீராடி முன்னோர் நினைவாக திதி கொடுத்து ஆஞ்சநேயரை தரிசிக்க பக்தர்கள் பெருமளவில் வந்து செல்கின்றனர். நாளை ஆடி அமாவாசை என்பதால் கோயில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள் ளது. கோயில் அர்ச்சகர் விஜயராகவன் கூறுகையில்,"" காலை 5.30 மணிக்கு நடை திறந்து பறம்பரை அறங்காவலர் வெள்ளிமலை காமயசாமி சார்பில் முதல் அபிஷேகம் நடக்கிறது. ஆஞ்சநேயருக்கு வடை, துளசி, வெற்றிலை மாலை அணிவித்து சிறப்பு அபிஷேகங்கள் நடக்கும். இரவு 9.00 மணிக்கு நடை சாத்தப்படும்"என்றார். உசிலம்பட்டி, வத்தலக்குண்டு, திண்டுக்கல் டெப்போக்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆடி அமாவாசையை முன்னிட்டு வைகை ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டு உள்ளது.