கிள்ளை: கிள்ளை அருகே கோவில்களில் ஆடி விழாவை முன்னிட்டு பக்தர்கள் பொங்கல் வைத்து காவடி எடுத்தனர். சிதம்பரம் அடுத்த தெற்கு பி ச்சாவரத்தில் அமைந்துள்ள பூரணபுஷ்கலம்பாள் சமேத குட்டியாண்டவர் கோவிலில் நேற்று ஆடி திருவிழாவை முன்னிட்டு சென்னை, புதுச்சேரி மற்றும் நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்த வந்த பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி பொங்கலிட்டு வழிபட்டனர். அழிஞ்சிமேடு: வடக்கு தில்லைநாயகபுரத்தை சேர்ந்த அழிஞ்சிமேடு மகாமாரியம்மன் கோவிலில் ஆடி விழாவை முன்னிட்டு நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பினர் கரகம், சூலாயுதம் வீதியுலாவின் போது பக்தர்கள் வீடுகள் தோறும் வாசலில் கலசம் வைத்து மாவிளக் கிட்டு தரிசனம் செய்தனர். பின்னர் கூழ்வார்த்தலும், மாலை சுவாமி வீதியுலா நடைபெற்றது.