ஆர்.கே.பேட்டை:ஆடி திருவிழாவை ஒட்டி, உலகாத்தம்மனுக்கு, இன்று, 108 பால்குடங்கள், ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, அபிஷேகம் செய்யப்படுகிறது. நாளை மறுதினம் மகா அபிஷேகம், ஆராதனை நடக்கிறது.ஆர்.கே.பேட்டை அடுத்த, நாகபூண்டியில், உலகாத்தம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதத்தையொட்டி, இன்று, காலை 10:00 மணிக்கு, பால்குடங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட உள்ளது. மாலை 6:00 மணிக்கு, உற்சவர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.