சங்கராபுரம்: காட்டுவனஞ்சூர் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி பூரவிழா நடந்தது. சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூர் பக்த ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் உள்ள, ஆண்டாளுக்கு ஆடி பூரத்தை முன்னிட்டு, நேற்று காலை விஷேச அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மகா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராம பக்த ஆஞ்சநேயர் கோவில் அறங்காவலர் வெங்கடேச பாகவதர், அன்பழகன், பழமலை மற்றும் ஊர் பொது மக்கள் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.