கடலூர்: கடலூர் ஆனைக்குப்பம் முத்து மாரியம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடந்தது. கடலூர் ஆனைக்குப்பம் முத்துமாரியம்மன் கோவில் 51ம் ஆண்டு செடல் உற்சவத்தையொட்டி கடந்த 9ம் தேதி காலை கணபதி ஹோமம், பந்தல்கால் முகூர்த்தம், 11ம் தேதி பால்குட ஊர்வலம் நடந்தது. 12ம் தேதி காலை சிறப்பு அபிஷேகம், மாலை குத்துவிளக்கு பூஜை, 13ம் தேதி கொடியேற்றம் நடந்தது. நேற்று பகல் சாகை வார்த்தல், மாலை செடல் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று செடல் போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இரவு வீதியுலா நடந்தது.