பதிவு செய்த நாள்
17
ஆக
2015
12:08
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், பெரும்பாலான கோவில்களில், ஆடிப்பூரம் விழா கோலாகலமாக நடந்தது. தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர், கல்யாண காமாட்சியம்மன் கோவிலில் ஆடிபூர விழா நேற்று நடந்தது. இதையொட்டி, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தது. மாலை, 4 மணி முதல், 6.30 மணிவரை அம்மனுக்கு வளைகாப்பு விழா நடந்தது.பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல், மாங்கல்ய சரடு, கற்கண்டு பொங்கல் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. இரவு, 10 மணி வரை அம்மன் சிறப்பு தரிசனம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
* தர்மபுரி நெசவாளர் மாரியம்மன் கோவில், சௌடேஸ்வரி அம்மன் கோவில், கடை வீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில், குமாரசாமிப்பேட்டை மாரியம்மன் கோவில், காரிமங்கலம் மந்தைவீதி மாரியம்மன் கோவில், வெள்ளயன் கொட்டாவூர் மாரியம்மன் கோவில், அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவில், பாலக்கோடு புதூர் மாரியம்மன் கோவில் உட்பட பல்வேறு அம்மன் கோவில்களில் ஆடி பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள், திருவீதி உலா, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் ஆகியவை நடந்தது.