பதிவு செய்த நாள்
17
ஆக
2015
01:08
வேலூர்: வேலூர் அடுத்த, வாலாஜாபேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், ஆரோக்கிய லட்சுமி, தன்வந்திரி பெருமாளுக்கு, நேற்று காலை, 10 மணிக்கு, திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. முரளிதர ஸ்வாமிகள் திருக்கல்யாணத்தை நடத்தினார். இந்நிகழ்வில் பங்கேற்ற பக்தர்கள், சீர் வரிசை பொருட்கள் எடுத்துக் கொண்டு, ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, சிறப்பு பூஜை, யாகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, 73 பரிவார தெய்வங்கள், 468 சித்தர்களை வழிபட்டனர். திருமணம் ஆகாத ஆண்களுக்கு, கந்தர்வராஜ யாகம், கூட்டுப்பிரார்த்தனை நடந்தது.