பதிவு செய்த நாள்
18
ஆக
2015
11:08
தியாகதுருகம்: திம்மலை கிராமத்தில் உள்ள இருசாயி அம்மன், சன்னியாசியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. தியாகதுருகம் அடுத்த திம்மலை கிராமத்தில் நூற்றாண்டு பழமையான இருசாயி அம்மன், சன்னியாசியப்பன் ஆகிய காவல் தெய்வங்களின் கோவில் உள்ளது. இதன் திருப் பணி வேலைகள் செய்து, கோவில் வளாகத்தில் 21 அடி உயர ஆஞ்சனேயர் சிலை அமைக்கப்பட்டது. அதேபோல் விநாயகர், முருகன், கிருஷ்ணன், அக்னிவீரன், குதிரை சேவகன், சப்தகன்னிகள் சிலைகளும் வடிவமைக்கப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் ய õகசாலை பூஜைகளுடன் துவங்கியது. நேற்று காலை 7 மணிக்கு கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்த பின் ஊராட்சி தலைவர் சிவலிங்கம், வில் லுமணி, துõக்கிரி, பொன்னகரையான் வகையறாவினர் முன்னிலையில் சுவாமி சிலைகளின் மீது சிவாச்சாரியார்கள் புனிதநீரை ஊற்றி கும்பாபி÷ ஷகம் செய்து வைத்தனர். தே.மு.தி.க., மாவட்ட செயலா ளர் வெங்கடேசன், அவைத்தலைவர் கோவிமுருகன், பொருளாளர் சண்முகம், ஒன்றிய செயலாளர் ஜெய்சங்கர், தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.