புதுச்சேரி: புதுச்சேரி, எஸ்.வி.பட்டேல் சாலையில் உள்ள, பெரியபாளையத்தம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா நடந்தது.விழாவையொட்டி, காலையில் அம்மனுக்கு பால்குட அபிஷேகம், அதனை தொடர்ந்து லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது.மாலை 6.௦௦ மணிக்கு, அம்மனுக்கு வளைகாப்பு மற்றும் நலங்கு வைபவம் நடந்தது. ஏராளமான பெண்கள் அம்மனுக்கு நலங்கு வைத்து வழிபட்டனர்.தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது.