பதிவு செய்த நாள்
18
ஆக
2015
11:08
ஆர்.கே.பேட்டை: கொண்டாபுரம் ஓடைக்கரையில் உள்ள படவேட்டம்மன் கோவிலில், நேற்று, ஆடி திருவிழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, கொண்டாபுரம் கிராமம் ஓடைக்கரையில், படவேட்டம்மன் கோவில் உள்ளது. இந்கத கோவிலில், நேற்று, ஆடி திருவிழா நடந்தது. காலை 10:00 மணிக்கு, பூங்கரகத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன், வீதியுலா எழுந்தருளினார். அதை தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 6:00 மணிக்கு, அம்மனுக்கு குத்துவிளக்கு பூஜையும், சிறப்பு அர்ச்சனையும் நடத்தப்பட்டது. பின், உற்சவர் அம்மன், வாணவேடிக்கையுடன் பம்பை, உடுக்கை முழங்க, உலா எழுந்தருளினார். இதே போல், கொண்டாபுரம் ஒட்டர் காலனியில் உள்ள அம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.