பதிவு செய்த நாள்
18
ஆக
2015
12:08
திருச்சி: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில், இன்று (18ம் தேதி) ஆடிப்பூர தெப்பம் நடக்கிறது. திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில், ஆடிப்பூரம் உற்சவம் கடந்த, 7ம் தேதி துவங்கியது. கடந்த, 15ம் தேதி அம்மன் எழுந்தருளினார். 16ம் தேதி இரவு அம்மனுக்கு ஏற்றி, இறக்கும் வைபவம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தெற்ப உற்சவம், இன்று நடக்கிறது. ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரே உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. இதில் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி அம்மன், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் இரவு, 7 மணியளவில் எழுந்தருள்கின்றனர். தெப்பத்தில் மைய மண்டபத்தை, வலம் வந்து, அருள் பாலிக்கின்றனர். விழா ஏற்பாடுகளை, கோவில் உதவி கமிஷனர் முல்லை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்கின்றனர்.