பதிவு செய்த நாள்
18
ஆக
2015
02:08
1. ப்ராத ஸந்த்ரஸ்த போஜ க்ஷிதி பதி
வசஸா ப்ரஸ்துதே மல்ல தூர்யே
ஸங்க்கே ராஜ்ஞாம் ச மஞ்சாந் அபி யயுஷி
கதே நந்த கோபே அபி ஹர்ம்யம்
கம்ஸே ஸௌத அதிரூடே த்வம்
அபி ஸஹபல: ஸாநுக சாரு வேஷ:
ரங்க த்வாரம் கத: அபூ: குபித
குவாலயா பீட நாக அவலீடம்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அடுத்த நாள் காலை வேளையில் மிகவும் பயந்து இருந்த போஜ அரசனான கம்ஸன் உத்தரவினால் தூர்யம் என்ற வாத்தியம் ஒலிக்கப்பட்டது. இது மல்யுத்தப் போட்டி துவங்குவதற்கான அடையாளம் ஆகும். அனைத்து அரசர்களும் தங்களுக்கு இடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தனர். நந்தகோபர் மேல் தளத்தில் அமர்ந்தார். கம்ஸன் மாளிகையின் மேல் மாடத்தில் அமர்ந்தான். அப்போது நீயும் பலராமனும் மிகவும் அழகான உடைகள் அணிந்துகொண்டு, ஆயர் தோழர்கள் புடை சூழ, ரங்க ஸ்தானம் என்ற போட்டி நடக்கும் இடத்தின் வாயிலை அடைந்தாய். அங்கு (உன்னைக் கொல்ல) குவாலய பீடம் என்ற யானை வழியை மறித்து நின்றதாமே!
2. பாபிஷ்ட அபேஹி மார்காத் த்ருதம்
இதி வசஸா நிஷ்டுர க்ருத்த புத்தே
அம்பஷ்டஸ்ய ப்ரணோதாத் அதிக
ஜவ ஜுஷா ஹஸ்திதா க்ருஹ்யமாணா:
கேளீ முக்த: அத கோபீ குச கலச சிர
ஸ்பர்திநம் கும்பம் அஸ்ய
வ்யாஹத்ய ஆலீயதா: த்வம் சரண
புவி புந: நிர்கத: வல்கு ஹாஸி
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ அந்த யானைப் பாகனிடம், அடேய் பாவி! இந்த வழியை விட்டு நகர்ந்து நில் என்று கோபத்துடன் கூறினாய். இதனால் அம்பஷ்டன் என்னும் அந்த யானைப் பாகனுக்கு சினம் வந்தது. அவனது கட்டளையால் அந்த யானை உன் அருகில் வந்து உன்னை தனது தும்பிக்கையால் வளைத்தது. நீயோ மிகவும் சுலபமாக அதன் பிடியில் இருந்து நழுவினாய். கோபிகைகளின் ஸ்தனங்களுடன் வெகு நாட்களாகவே போட்டியிட்ட அந்த யானையின் தலையில் இருபுறத்தில் உள்ள முண்டுகளை நீ ஓங்கி அடித்தாய். பின்னர் அதன் கால்களுக்கு இடையே ஓடிப்போய் மறைந்து கொண்டாய். அதன் பின்னர் பரிகாசமாகச் சிரித்தபடி வெளியில் வந்தாய்.
3. ஹஸ்த ப்ராப்ய: அபி அகம்ய: ஜடிதி
முநி ஜநஸ்ய இவ தாவந் கஜேந்த்ரம்
க்ரீடந் ஆபாத்ய பூமௌ புந: அபிபதத்
தஸ்ய தந்தம் ஸஜீவம்
மூலாத் உந்மூல்ய தத் மூலக மஹித மஹா
மௌக்திகாந் ஆத்ம மித்ரே
ப்ராதா: த்வம் ஹாரம் ஏபி: லலித விரசிதம்
ராதிகாயை திச இதி
பொருள்: குருவாயூரப்பா! நீ முனிவர்களின் கைகளுக்கு எட்டும் தூரத்தில் இருந்தாலும் அகப்படுவதில்லை. அதேபோல் அந்த யானையின் அருகில் நின்ற போதிலும் அதன் பிடியில் சிக்கவில்லை. அப்போது நீ விளையாட்டாகத் தரையின் மீது விழுந்தாய். உடனே உன்னை நோக்கி அந்த யானை ஓடி வந்தது. அப்போது அதன் தந்தங்களைப் பிடித்து அவற்றை அடியோடு பிடுங்கினாய். அவற்றின் அடியில் காணப்பட்ட பெரிய முத்துகளை எடுத்து, இவற்றை அழகான மாலை யாக்கி ராதைக்குக் கொடு என்று உன் நண்பனிடம் கூறினாய் அல்லவா?
4. க்ருஹ்ணாநம் தந்தம் அம்ஸே யுதம்
அத ஹலிநா ரங்கம் அங்க ஆவிசந்தம்
த்வாம் மங்கல்ய அங்க பங்கீ ரபஸ
ஹ்ருத மந: லோசநா வீக்ஷ்ய லோகா:
ஹம் ஹோ தந்ய: நு நந்த: நஹி நஹி
பசு பால அங்கநா: நோ யசோதா
நோ நோ தந்ய: ஈக்ஷணா: ஸ்ம: த்ரி ஜகதி
வயம் ஏவ இதி ஸர்வே சசம்ஸு:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அதன் பின்னர் அந்த தந்தங்களை உங்கள் தோள்களில் பதித்து நீயும் பலராமனும் அந்த மல்யுத்த அரங்கிற்குள் நுழைந்தீர்கள். அங்கு இருந்த மக்கள், உனது மங்களகரமான திருமேனியால் தங்கள் மனதும் கண்களும் கவரப்பட்டவர்கள் ஆனார்கள். அவர்கள், ஆஹா! இந்த மூன்று உலகங்களிலும் மிகுந்த புண்ணியசாலி நந்தகோபரே! இல்லை! இல்லை! கோபிகைகளே ஆவர்! இல்லை இல்லை! யசோதையே ஆவாள்! இல்லை இல்லை! இக்காட்சியைக் காணக் கண் படைக்கப்பட்ட நாம் அல்லவோ பாக்கியம் பெற்றவர்கள் என்று வியந்தனர்.
5. பூர்ணம் ப்ரஹ்ம ஏவ ஸாக்ஷாத் நிரவதி
பரம ஆநந்த ஸாந்த்ர ப்ரகாசம்
கோபேஷு த்வம் வ்யலாஸீ: ந கலு
பஹு ஜநை: தாவத் ஆவேதித: அபூ:
த்ருஷ்ட்வா அத த்வாம் ததா இதம்
ப்ரதமம் உபகதே புண்ய காலே ஜந ஓகா:
பூர்ண ஆனந்தா: விபாபா: ஸரஸம்
அபிஜகு: த்வத் க்ருதாநி ஸ்ம்ருதாநி
பொருள்: குருவாயூரப்பா! நீ பரிபூர்ணமாக எங்கும் உள்ளவன்: பரப்ரஹ்ம்மமாகவே உள்ளவன்: எல்லைகள் இல்லாத பரமானந்த வடிவமானவன்: ப்ரகாசமானவன் இத்தகைய நீ கோபர்களின் கண்களுக்குத் தெரியும்படி அவர்கள் நடுவிலேயே வாழ்ந்தாய். அப்போது உன்னை இப்படியாக அவர்கள் அறியவில்லை. ஆயினும் தங்கள் புண்ணிய காலம் பலிக்கும் நேரம் வந்தபோது உன்னை இப்படியாகக் (மேலே கூறியபடி) காண முடிந்தது. அந்த நேரத்தில் அவர்கள் பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெற்றவர்களாகவும், மனம் முழுவதும் ஆனந்தம் உடையவர்களாகவும் மாறினார்கள். உடனே உனது லீலைகளைப் பாடல்களாகப் பாடினர்.
6. சாணூர: மல்ல வீர: ததநு ந்ருப கிரா
முஷ்டிக: முஷ்டி சாலீ
த்வாம் ராமம் ச அபிபேதே ஜட ஜடிதி மித:
முஷ்டி பாத அதிரூக்ஷம்
உத்பாத ஆபாதந ஆகர்ஷண விவித
ரணாநி ஆஸதாம் தத்ர சித்ரம்
ம்ருத்யோ: ப்ராக் ஏவ மல்ல ப்ரபு;
அகமத் அயம் பூரிச: பந்த மோக்ஷாந்
பொருள்: ப்ரபுவே! க்ருஷ்ணா! குருவாயூரப்பா! அப்போது கம்ஸனின் ஆணைக்கு இணங்க சாணூரன் என்பவன் உன்னுடன் மல்யுத்தம் செய்தான். முட்டிப் போரில் தேர்ந்தவனான முஷ்டிகன் என்பவன் பலராமனுடன் மோதினான். உங்கள் முட்டிகள் மோதியபோது எழுந்த சட சட என்ற சத்தம் அச்சம் விளைவித்தது. மேலே தூக்கி எறிவதும். கீழே தள்ளுவதும், கையைப் பிடித்து வேகமாக இழுப்பதும் ஆகிய பல முறைகளில் மல்யுத்தம் நடைபெற்றது. சாணூரன் என்ற அந்த மல்லன் இறப்பதற்கு முன்னால் பலமுறை பந்தமும் (உனக்கு கட்டுப்படுதலும்) மோட்சமும் அடைந்தான் அல்லவா?
7. ஹா திக்கஷ்டம் குமாரௌ ஸீலலித
வபுஷௌ மல்ல வீரௌ கடோரௌ
ந த்ரக்ஷ்யாம: வ்ரஜாம: த்வரிதம் இதி
ஜநே பாஷமாணே ததாநீம்
சாணூரம் தம் கர உத்ப்ராமண விகலத்
அஸும் போதயாம் ஆஸித உர்வ்யாம்
பிஷ்ட: அபூத் முஷ்டிக: அபி த்ருதம் அத
ஹலிநா நஷ்ட சிஷ்டை: ததாவே
பொருள்: குருவாயூரப்பா! அங்கு இருந்த மக்கள், ஆஹா! இது என்ன கொடுமை! அந்தச் சிறுவர்கள் மிகவும் மென்மையான உடலுடன் உள்ளனரே. அந்த மல்லர்கள் கொடியவர்கள் ஆயிற்றே. நாம் இந்தப் போட்டியைக் காண்பதை விட இங்கிருந்து போய் விடலாம். என்று கூறிக்கொண்டனர். அந்த நேரத்தில் நீ சாணூரனைக் கைகளால் பிடித்துச் சுழற்றினாய். அவன் உயிர் பிரியும் தறுவாயில் அவனைத் தரையில் ஓங்கி அடித்தாய். அதே போல் பலராமனும் முஷ்டிகனை அழித்தான். மற்ற மல்லர்கள் அஞ்சி ஓடி விட்டனராமே!
8. கம்ஸ: ஸர்வார்ய தூர்யம் கல மதி:
அவிதந் கார்யம் ஆர்யார் பித்ரூ ஸ்தாந்
ஆஹந்தும் வ்யாப்த மூர்த்தே: தவ ச
ஸமசிஷத் தூரம் உத்ஸாரணாய
ருஷ்ட: துஷ்டஉக்திபி: த்வம் கருட இவ
கிரிம் மஞ்சம் அஞ்சந் உதஞ்சத்
கட்க வ்யாவல்க துஸ்ஸங்க்ரஹம் அபி ச
ஹடாத் ப்ராக்ரஹீ: ஓளக்ர ஸேநீம்
பொருள்: குருவாயூரப்பா! இதனைக் கண்ட கொடுமையான கம்ஸன், தூர்ய வாத்தியத்தை நிறுத்தும்படி கூறினான். என்ன செய்வது என்று புரியாமல், வணங்க வேண்டியவர்களான உக்ரசேனன், நந்தகோபர், வஸுதேர் ஆகியோர்களைக் கொல்லும்படி உத்தரவிட்டான். உன்னை வெகுதூரம் விரட்டும்படி உத்தரவிட்டான். அவனது இத்தகைய கொடுமையான கட்டளைகளால் நீ மிகுந்த கோபம் கொண்டாய். உடனே கருடன் வேகமாகப் பறந்து பாய்வது போல் அவன் அமர்ந்திருந்த இருக்கை மீது பாய்ந்தாயாமே! அவன் தனது வாளை வீசியபடி உன்னால் அவனைப் பிடிக்க முடியாமல் தடுக்க முயற்சித்தான். ஆயினும் நீ அவனைப் பிடித்தாய் அல்லவா?
9. ஸத்ய: நிஷ்பிஷ்ட ஸந்திம் புவி நர பதிம்
ஆபாத்ய தஸ்ய உபரிஷ்டாத்
த்வயி ஆபாத்யே ததா ஏவ த்வத் உபரி
பதிதா நாகிநாம் புஷ்ப வ்ருஷ்டி:
கிம் கிம் ப்ரூம: ததாநீம் ஸததம் அபி
பியா த்வத் கத ஆத்மா ஸ: பேஜே
ஸாயுஜ்யம் த்வத் வத உத்தா பரம வாம்
இயம் வாஸநா கால நேமே:
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! நீ பிடித்ததால் கம்ஸனின் மூட்டுகள் உடைந்தன. அவனைத் தரையில் தள்ளினாய். அவன் மீது விழுந்தாய். அப்போது மகிழ்ந்த தேவர்கள் உன் மீது மலர்கள் தூவி வணங்கினர். பரப்ரஹ்மா! நான் என்ன சொல்வது? உன்னிடம் இருந்த பயம் காரணமாக அவன் உன்னையே எண்ணியவனாக இருந்தான். இதனால் உன்னுடன் அவன் ஐக்யமானான். அவன் உன்னுடன் சேர்வதற்கான பாக்கியம் என்ன? முன் ஜென்மத்தில் அவன் காலநேமியாக இருந்து உன்னால் கொல்லப்பட்டான். இதனால் அவனுக்கு இந்தப் பிறவியிலும் புண்ணியம் கிடைத்தது.
10. தத் ப்ராத்ரூந் அஷ்ட பிஷ்ட்வா த்ருதம்
அத பிதரௌ ஸந்தமந் உக்ரஸேநம்
க்ருத்வா ராஜாநம் உச்சை: யதுகுலம்
அகிலம் மோதயந் காமதாநை:
பக்தாநாம் உத்தமம் ச உத்தவம் அமர குரோ:
ஆப்த நீதிம் ஸகாயம்
லப்த்வா துஷ்ட: நகர்யாம் பவநபுர
பதே ருந்தி மே ஸர்வ ரோகாந்
பொருள்: க்ருஷ்ணா! குருவாயூரப்பா! பின்னர் நீ கம்ஸனின் எட்டு தம்பிகளையும் அழித்தாய். உனது பெற்றோர்களான வஸுதேவரையும், தேவகியையும் கண்டு வணங்கினாய். உக்கிரஸேனருக்கு மீண்டும் அரச பதவியை அளித்தாய். யதுகுலத்தில் பிறந்த அனைவருக்கும் அனைத்தும் கொடுத்தாய். உனது பக்தர்களில் சிறந்தவனும், தேவகுருவான ப்ருகஸ்பதியிடம் பயின்றவனும் ஆகிய உத்தவரை உனது நண்பராகக் கொண்டாய். இப்படியாக நீ மதுராவில் மகிழ்வுடன் வசிக்கத் தொடங்கினாய். இப்படிப்பட்ட நீ எனது பிணிகளைத் தீர்க்க வேண்டும்.