பதிவு செய்த நாள்
19
ஆக
2015
11:08
ஓமலூர்: கோட்டை மாரியம்மன் கோவிலில், உலக நன்மை வேண்டி, திருவிளக்கு பூஜை நடந்தது. ஓமலூர் கோட்டை மாரியம்மன் கோவிலில், உலக நன்மை வேண்டி, 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதையடுத்து, ஸ்ரீலட்சுமி கணபதி ஹோமம், 1,008 திருவிளக்கு பூஜை நடந்தது. இதில், பெண்கள் பங்கேற்று, உலக நன்மை வேண்டியும், மாங்கல்யம் நிலைக்க வேண்டியும் வழிபாடு செய்தனர். பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும், புடவை, ஸ்வாமி படம், குங்குமச்சிமிழ் வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பெண்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, ஓம் ஸ்ரீ ஆன்மீக நற்பணி குழு நிர்வாகிகள் ராஜேந்திரன், மணிகண்டன் ஆகியோர் செய்தனர்.