அன்னுார்: மேகிணறு சுயம்பு விநாயகர் கோவில் கும்பாபிஷேகம், நாளை நடக்கிறது. மேகிணற்றுப்புதுாரில் விநாயகர் சுயம்பாக தோன்றி அருள்பாலித்து வருகிறார். 100 ஆண்டு பழமையான இக்கோவிலில் பல திருப்பணிகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேக விழா இன்று காலை, 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. மாலையில், மகாலட்சுமி ஹோமம், தன பூஜை மற்றும் நவக்கிரக ஹோமம் நடக்கிறது. இரவு வேள்வி பூஜை, வேத பாராயணம் நடக்கிறது. வரும், 20ம் தேதி காலை, 9:30 மணிக்கு சுயம்பு விநாயகருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு தச தரிசனம், தச தானம், அலங்கார பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.