பதிவு செய்த நாள்
19
ஆக
2015
11:08
விழுப்புரம்: விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஆனந்த வரதராஜபெருமாள் கோவிலில் நாளை கும்பாபிஷேக விழா நடக்கிறது. விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆனந்த வரதராஜபெருமாள், விமானம், விநாயகர், ஆஞ்சநேயர், கருடன், புதிய மண்டபங்களுக்கு வரும் 20ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவை யொட்டி நேற்று மாலை 5:00 மணிக்கு சங்கல்பம், புண்யாஹம், ய õகசாலை வாஸ்து, கலாகர்ஷ்ணம், ஆராதனம் நித்யஹோமம், இரவு 8:30 மணிக்கு பூர்ணாஹூதி ஆராதனம், சாற்றுமுறை பிரசாதம் நடந்தது. நாளை (20ம் தேதி) காலை 8:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 8:45 மணிக்கு கடம் புறப்பாடு, 9:15 மணிக்கு விமானம் கும்பாபிஷேகம், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 7:30க்கு வரதர் ஸ்ரீதேவி, பூதேவியோடு சன்னதி உள்புறப்பாடு நடக்கிறது.