திருப்புத்தூர்: திருப்புத்தூர் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆவணி துவக்கத்தை அடுத்து சிறப்பு பூஜை நடந்தது.நேற்று பகல் 11.30 மணிக்கு ஸ்ரீதேவி,பூதேவியருடன் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனை நடந்தது. பின்னர் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ஒவ்வொரு ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஸ்ரீமகாலெட்சுமிக்கு பகல் 11 மணிக்கு திருமஞ்சனம் நடைபெற உள்ளது. செப்.,9ல் மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது.