பதிவு செய்த நாள்
19
ஆக
2015
12:08
வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் முனியப்பன் ஸ்வாமி கோவிலில், ஆடி இறுதி நாளை, "கழுவாடி பண்டிகையாக கொண்டாடப்பட்டது. காவிரியில் இருந்து தீர்த்தம் மற்றும், 1,008 பால் குடங்கள், வேலாயுதம்பாளையம் ரவுண்டானா வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, முனியப்ப ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பால், இளநீர், பன்னீர், சந்தனம், திருமஞ்சனம் விபூதி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், உற்சவ மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின், ஊர் மக்களின் நன்மைக்காக சிறப்பு யாக வேள்வி , பூர்ணாகுதி உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. அதன் பின், விநாயகர், குழந்தை வேலாயுத ஸ்வாமிக்கும் காவல் தெய்வங்களான கருப்பனார், நாகம்மா உள்ளட்ட தெய்வங்களுக்கும் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. காவிரி ஆற்றில் இருந்து, கோவில் பூசாரி மோகன் முக்கிய இடங்களில், அரிவாள் மீது ஏறி வந்தார். இந்நிகழ்சிகளில், பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.