புதுடில்லி : இந்தியாவிலுள்ள முக்கிய ஆன்மிக நகரங்களாக ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் ஆகியவற்றை பாரம்பரிய நகரங்களாக மத்திய அரசு அறிவிக்க உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. வருங்காலத்தில் இந்நகரங்கள் மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கப்படும் என மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.