பதிவு செய்த நாள்
20
ஆக
2015
12:08
திருத்தணி: விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில், நேற்று, ஆடி திருவிழா மற்றும், 108 பால்குட ஊர்வலம் நடந்தன. திருத்தணி அடுத்த, கன்னிகாபுரம் மோட்டூர் பகுதியில், விஷ்ணு துர்க்கையம்மன் கோவில் உள்ளது. இங்கு, நேற்று, ஆடி திருவிழா நடந்தது. காலை, 10:00 மணிக்கு, 108 பால்குடங்களை ஏந்தி பெண்கள் ஊர்வலமாக வந்தனர். காலை, 10:30 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தன. மாலையில் சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தன. இதையடுத்து, உற்சவர் அம்மன், சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.