திருப்பூர் : ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வரும் 28ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வரும் 28ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்றைய தினம், பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். அதற்கு பதிலாக, வரும் செப்., 12ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி களும் இயங்கும். உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும், அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் இயங்கும், என தெரிவித்துள்ளார்.