Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! முத்தாலம்மன் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்! முத்தாலம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

பதிவு செய்த நாள்

21 ஆக
2015
10:08

மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே, 200 ஆண்டுக்கு மேல் பழமைவாய்ந்த திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று, ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் நடந்தது. மடத்துக்குளம் அருகே வஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற திரவுபதியம்மன் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச பாண்டவர்கள், இப்பகுதியில் வசித்ததாக நிலவும் ஐதீகத்தின் அடிப்படையில், 200 ஆண்டுக்கு முன் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலை புதுப்பிக்கும் பணி, சில ஆண்டுக்கு முன் தொடங்கியது. விஸ்தரித்து கட்டப்பட்ட கோவிலில், புதிய கோபுரம், முன் மண்டபங்கள், புதிய சிலைகள், குதிரை வாகனங்கள் நிறுவப்பட்டன. சுற்றுச்சுவரும் அமைக்கப்பட்டது. இதையடுத்து, பக்தர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கும்பாபிஷேக விழா, ஆக.,18 மாலை, 6:00 மணிக்கு முதல் கால யாக பூஜையுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று நான்காம் கால யாக பூஜை முடிவில், மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கும்பாபிஷேகத்தை தரிசித்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar