தேவகோட்டை: தேவகோட்டை அய்யனார் வயலில், சிலையுடைய அய்யனார் கோயில், பெரிய கருப்பண்ணசாமி கோயில் உட்பட 21 பரிவார சன்னதிகளுக்கு திருப்பணி நடந்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. கிருஷ்ணமூர்த்தி சிவாச்சாரியார், காரியப்ப வாத்தியார், பாண்டிச்செல்வம் சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியர்கள் யாகபூஜை செய்தனர். கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ.,ராமசாமி,எம்.பி. செந்தில்நாதன், எம்.எல்.ஏ. பழனிச்சாமி, ஊராட்சி தலைவர் முத்தையா உட்பட அம்பலகாரர்கள்,கிராமத்தினர் பங்கேற்றனர்.