பழநி: பழநி கணக்கன்பட்டி உச்சிமாகாளியம்மன்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு யாகபூஜைகள், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. நேற்று காலை 7.50 மணிக்கு கோபுர விமானங்களில் கும்பகலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. உச்சிமகாகாளியம்மன், ஆதிசிவன், ஆதிவிநாயகர், நவக்கிரகம் பரிவார தெய்வங்களான மதுரைவீரன், முனியப்பசுவாமி குடமுழுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. மரிச்சிலம்பு ஊராட்சி பூலாம்பட்டி குப்பபாட்டன் பாட்டி சுவாமி கோயிலில் ஆக.,19 முதல் யாகபூஜைகள் நடந்தது. நேற்று கோயில் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.பலர் பாராட்டினர்.