பதிவு செய்த நாள்
22
ஆக
2015
12:08
காரிமங்கலம்: காரிமங்கலம் அடுத்த, ஏ.முருக்கம்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிரியானஅள்ளியில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த, 19ம் தேதி விக்னேஸ்வரர் பூஜை, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று முன்தினம் சுதர்ஷன ஹோமம், பால்குடம் எடுத்தல், முதல்கால யாகபூஜை, வாஸ்து சாந்தி, அங்குராப்பணம் ஆகியவை நடந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை, அக்னி பூஜை, கும்ப ஆராதனை நடந்தது. 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் கும்பாபிஷேகம் நடந்தது. முரளி பட்டார்ச்சாரியார் தலைமை வகித்து, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். காலை 9 மணிக்கு கோ பூஜை, அபிஷேகம், தீபாராதனை, பிரம்ம கோஷம், உபயதாரர்களுக்கு மரியாதை ஆகியவை நடந்தது. 10 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.