Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரையில் நேற்று.. தருமிக்குப் ... திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக சுற்றுலா தளங்களில் கம்போடிய இந்து கோயில்களுக்கு முதல் இடம்!
எழுத்தின் அளவு:
உலக சுற்றுலா தளங்களில் கம்போடிய இந்து கோயில்களுக்கு முதல் இடம்!

பதிவு செய்த நாள்

22 ஆக
2015
05:08

நியூயார்க்: உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா வாசிகள் விரும்பிச் செல்லும் சுற்றுலா தளங்களில், கம்போடியாவில் உள்ள ஆங்கோர் இந்து கோயில்கள் முதல் இடத்தைப் பிடித்துள்ளன.

உலக அளவில் சுற்றுலாவாசிகள் அதிகம் செல்லும் சுற்றுலா தளங்களை அமெரிக்காவில் உள்ள லோன்லி பிளேனட் என்ற அமைப்பு வரிசைப்படுத்தி உள்ளது. இதில் கம்போடியாவில் "பூமியில் உள்ள இந்து சொர்க்கம்" என அழைக்கப்படும் ஆ.ங்கோர் இந்து கோயில்கள் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. வடக்கு கம்போடியாவில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள், கருவறைகள், கோபுரங்கள் இந்த உச்சத்தைப் பெற்றுத் தந்துள்ளன. உலகின் மிகப்பெரிய விஷ்ணு கோயில் இங்கு உள்ளது. பர்மா, .லாவோஸ் மற்றம் தெற்கு சீனாவிலும் இந்து சாம்ராஜ்ஜியம் பரவி இருந்தது என்பதை தெளிவுபடுத்தி உள்ளது. ஆங்கோரில் உள்ள இந்த கோயில்களின் தூண்களிலும், தரையிலிருந்து கூரை வரையும், ராமாயணம், மகாபாரத காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன.

ஆங்கோர் இந்து கோயில்களை அடுத்து, ஆஸ்திரேலியாவில் உள்ள உலகின் மிகப் பெரிய பவளப் பாறைகள் இரண்டாம் இடத்தையும், பெரு நாட்டில் உள்ள பழமையான கூரான மலைச் சிகரம் மூன்றாவது இடத்தையும், சீனப் பெருஞ்சுவர் நான்காம் இடத்தையும், இந்தியாவின் தாஜ்மகால் ஐந்தாம் இடத்தையும், அமெரிக்கா அரிசோனா மாகாணத்தில் உள்ள உலகப் பாரம்பரிய தேசிய பூங்கா ஆறாம் இடத்தையும், இத்தாலியில் உள்ள பழமையான விளையாட்டரங்கம் ஏழாம் இடத்தையும், பிரேசில்- அர்ஜென்டினா எல்லையில் உள்ள இகுவாஜு நீர்வீழ்ச்சி எட்டாம் இடத்தையும், ஸ்பெயினில் உள்ள ஆலம்பரா கோட்டை மாளிகை ஒன்பதாம் இடத்தையும், துருக்கியில் உள்ள ஆயா ஷோபியா என்ற அருங்காட்சியகம் ( இது முதலில் தேவாலயமாக இருந்து, பின்னர் மசூதியாக மாற்றப்பட்டு, தற்போது அருங்காட்சியகமாக உள்ளது) பத்தாம் இடத்தையும் பெற்றுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar